4.6 தொகுப்புரை

அன்பார்ந்த மாணவர்களே! இதுவரை சீவக சிந்தாமணியின் பல்வேறு சிறப்புகளைத் தொகுத்துக் கண்டோம். இவை மட்டும்தான் சிந்தாமணியின் சிறப்பு என்று எண்ணி விடாதீர்கள். இன்னும் எத்தனை எத்தனையோ சிறப்புக்கள், நயங்கள் இதிலே உண்டு. இதிலே இடம் பெற்றுள்ள கவிதை நயம் சுவைத்து இன்புறத்தக்கது. நூல் அறிமுகம், ஆசிரியர் அறிமுகம், காப்பியக் கட்டமைப்பு, இலக்கிய நயம், சமூக, சமய, அரசியல் சிந்தனைகள், கலைகள் பற்றிய செய்திகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றை எல்லாம் நன்கு பயின்று மேலும் இந்நூலின் சிறப்பினை நுணுகிக் காண்க.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.

சிந்தாமணி யாப்பமைப்பைக் குறிப்பிடுக.

விடை
2.

சிந்தாமணியில் பின்னோக்கு உத்தி பற்றிக் குறிப்பிடுக.

விடை
3.

கோவிந்தை திருமணம் எவ்வகைச் சடங்குகளுடன் நிகழ்த்தப்படுகிறது?

விடை
4.

ஊழ்வினை சிந்தாமணியில் இடம்பெறுமாற்றை ஒரு சான்று தந்து விளக்குக.

விடை
5.

இசைபாடுகிற போது முகபாவனை எவ்வாறு இருக்க வேண்டும்?

விடை