1.5 தொகுப்புரை
வினைச்சொல்லின் பொது இலக்கணம் என்னும் இப்பாடத்தில் வினைச்சொல் என்றால் என்ன, அதன் இயல்பு யாது என்பது விளக்கப்பெற்றது. தெரிநிலைவினை காலம் காட்டுகிற இடைநிலைகளைப் பெற்று, வெளிப்படையாகக் காலம் காட்டும் என்பதும், குறிப்புவினை குறிப்பாகக் காலம் காட்டும் என்பதும்
அறிவிக்கப்பெற்றன.
தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை, உடன்பாட்டுவினை, எதிர்மறைவினை ஆகிய வினை வகைகள் குறித்து விளக்கம் தரப்பட்டது.
பின்னர், ஏவல், வியங்கோள் ஆகியன பற்றியும், காரணவினை என்பது பற்றியும் விரிவாகக் கூறப்பட்டது.
இறுதியில், வினைச் சொற்களில் இருந்து சிலவகைப் பெயர்ச்சொற்கள் எவ்வாறு அமைகின்றன, அவை எவ்வகை இயல்புகளைப் பெற்றுள்ளன என்பன சுட்டப்பெற்றன. இவ்வாறு வினைச்சொல் பற்றிய செய்திகள் பொது நிலையில் இப்பாடத்தில் விளக்கப்பெற்றன.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II |
1. |
வியங்கோள் வினை எவ்வெப் பொருள்களில் வரும்? | விடை |
2. |
காலம் காட்டும் தொழிற்பெயர்கட்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக. | விடை |
3. |
வினையாலணையும் பெயர், குறிப்புவினையிலிருந்து அமையுமா? அமையும் எனில் சான்று தருக. | விடை |
4. |
வினைப் பகுதியிலிருந்து தொழிற்பெயர் அமைவதற்குச் சான்றுகள் தருக. | விடை |
|
|