2.8 தொகுப்புரை
பல்லவரும், பாண்டியரும் தமிழகத்தை ஆண்ட இக்காலக் கட்டத்தில் சைவ, வைணவ சமயங்கள் செல்வாக்குப் பெற்றன. சமண - பௌத்த சமயங்கள் சமயவாதங்களில் நலிந்ததை அப்பர், சம்பந்தர், திருமழிசை ஆழ்வார் ஆக்கங்களில் காணலாம். முதல் ஆறு தேவாரத் திருமுறைகள் தோன்றின. இதிகாச, இராமாயண நூல்கள் செல்வாக்குடன் இருந்தன. வைணவ இலக்கியம் தோற்றம் பெற்றது. அறநூல்கள், அரசர் புகழ் பாடும் தனிநூல்கள், சமணர் யாத்த இலக்கணநூல் (காக்கைப்பாடினியம்) பற்றி அறிய முடிகிறது. தமிழில் சைவ-வைணவ மறுமலர்ச்சியும், ‘பக்தி இயக்க’ எழுச்சியும், பக்திப் பாடல்களின் பெருக்கமும் ஒருசேர மலர்ந்ததைக் காண முடிகிறது.
|