5.7 தொகுப்புரை

பல்லவர் ஆட்சி முடிவுற்றுச் சோழர் ஆட்சி தோற்றம் பெற்ற காலக்கட்டம் இது. வடமொழி, தமிழ் எனுமிரு மொழிகளும் புழக்கத்தில் இருந்தன. பக்தி இலக்கியம் தந்த புதுப்புது இலக்கிய வகைகள், அணிகள் ஆகியவற்றுக்கு விளக்கம் தரும் வண்ணம் இலக்கண நூல்கள், நிகண்டுகள் ஆகியவற்றுடன் தனிப்பாடல்களும் தோன்றின.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1. திவாகர நிகண்டின் ஆசிரியர் பற்றி எழுதுக. [விடை]
2. ஒருசொல் பலபொருள் பெயர்த்தொகுதி பற்றி விளக்குக. [விடை]
3. பாட்டியல் நூல் கூறும் இலக்கணம் எது? [விடை]
4. இறையனார் களவியல் உரையின் தனிச்சிறப்பு யாது? [விடை]
5. தனிப்பாடல்கள் எழுதிய பல்லவ மன்னனின் பெயர் யாது? [விடை]