1.5 தொகுப்புரை

இந்தப் பாடத்தில் எழுத்துப் பிறப்பு என்பது எழுத்தொலிகளின் பிறப்பு என்பதைத் தெரிந்து கொண்டோம். எழுத்தொலிகள் பிறப்பதற்கு உயிரின் முயற்சியும் உடல் உறுப்புகளின் ஒத்துழைப்பும் தேவைப்படுவன என்று தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் விளக்கங்களைக் கண்டோம். எழுத்தொலிகள், உந்தியில் இருந்து மேல் நோக்கி எழும் காற்று தலை, கழுத்து, மார்பு ஆகிய உறுப்புகளில் தங்கி, பல், இதழ், நாக்கு, அண்ணம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் பிறக்கின்றன. தொல்காப்பியமும் நன்னூலும் எழுத்தொலிகளின் பிறப்பினை விளக்கி இருந்தாலும் அவற்றிடையே ஒற்றுமை வேற்றுமைகள் இருப்பது ஒப்பிட்டுக் காட்டப்பெற்றது. மொழியை அறிவியல் முறையில் ஆராய்ந்த மொழிநூல் அறிஞர்கள் எழுத்துகளின் பிறப்பினை விளக்கியிருப்பதும் எடுத்துக்காட்டப்பட்டது. தமிழ் இலக்கண நூல்கள் மொழியியல் என்னும் தனித்துறை வளராத காலத்தில் எழுத்துகளின் பிறப்பினை அறிவியல் முறைப்படி விளக்கியிருப்பதையும் இப்பாடத்தின் வழி அறிந்து கொண்டோம்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1) நன்னூல் கருத்துப்படி, எழுத்துப் பிறப்பிற்காக முயற்சியில் ஈடுபடும் உறுப்புகள் எத்தனை? அவை யாவை? விடை
2) எழுத்துஒலி பிறப்பதற்குத் தேவைப்படும் மொத்த உறுப்புகள் எட்டு. இதில் தொல்காப்பியமும் நன்னூலும் உடன்படுகின்றனவா? விடை
3) எழுத்துப் பிறப்பிற்கு இடமாகும் உறுப்புகளாக நன்னூலார் குறிப்பிடுவன எத்தனை? அவை யாவை? விடை
4) தொல்காப்பியம், நன்னூல் ஆசிரியர்கள் எழுத்துஒலிகள் பிறப்பதில் தெரிவிக்கும் கருத்துகளின் வேற்றுமையைப் புலப்படுத்துக. விடை
5) தமிழ் இலக்கண நூல்கள், மொழியியல் கருத்துகளை வெளிப்படுத்துவதை விளக்குக. விடை