1.2
இலக்கணத் தோற்றம்
பாடுபொருளை மையமாகக் கொண்டு எழுந்த இலக்கியங்களையும், மக்களுடைய வழங்குமொழியையும்
கொண்டே இலக்கணங்கள் இயற்றப்பட்டன. எள்ளில் இருந்துதானே எண்ணெய் எடுக்கப்படும்?
அதுபோல, இலக்கியங்களைக் கண்டே இலக்கணம் வகுக்கப்படும் என்னும் உவமைவழியே,
இலக்கணம் தோன்றும் வகையை அகத்தியனார் மொழிந்தார். இதனையே, பின்னாளில்
வந்த பவணந்தியார் தமது நன்னூலில்,
‘இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் இயம்பல்
நிகழ்வுறும்’ என்று அறிவித்தார்.
1.2.1 இலக்கணம் என்பதன் பொருள்
இலக்கணம் என்பது இலக்கு+அண்+அம்
என்னும் மூன்று
சொல்லின் கூட்டு; இலக்கு - குறிக்கோள்; அண்-நெருங்குதல்;
அம்-பெயராக்க விகுதி. இலக்கணம் என்பதன் பொருளை மொழி
ஞாயிறு பாவாணர் அவர்கள் கீழ்வருமாறு குறிக்கிறார்:
இலக்கு-இலக்கணம்.
சிறந்த நடைக்கு எடுத்துக்
காட்டாக அல்லது கற்றோர் பின்பற்றும் இலக்காகக்
கூறப்பெறும் மொழியமைதி (Grammar). |
1.2.2 இலக்கணப் பாகுபாடும் வளர்ச்சியும்
பொருள் உணர்வைத் தோற்றுவது சொல்.
சொல், எழுத்தால்
ஆவது. சொல், ஓர் எழுத்தாலும் ஆகலாம்; இரண்டு, பல எனப்
பல எழுத்துக்களாலும் ஆகலாம். ஆனால்
அது பொருள்
பயப்பதாக இருத்தல் வேண்டும்.
எழுத்தே
தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரின்
பதமாம் -
(நன்னூல்) |
எனவே, இதலிருந்து காரண-காரிய முறைப்படி,
எழுத்து
சொல்
பொருள்,
என மூவகை இலக்கணங்கள் வகுக்கப்பட்டுள்ளமை தெரிய வரும்.
பண்டைநாள் இலக்கியங்கள் காதலையும் வீரத்தையும் பாடுபொருளாகக் கொண்டு
படைக்கப் பெற்றன என்று பார்த்தோம். இந்த இரண்டு பொருண்மையையும் குறித்துத்
தோன்றிய இலக்கணம் பொருள் இலக்கணம் எனப்பட்டது.
இவ்விரு பொருண்மைகளுள் ஒன்றாகிய காதல் வாழ்வைப் பற்றி வகுக்கப்பட்ட
இலக்கணம் அகப்பொருள் இலக்கணம் என்றும்,
போரினை மையமாகக் கொண்ட போர்த்திற வாழ்வைக் குறித்து வரையப்பட்ட இலக்கணம்
புறப்பொருள் இலக்கணம்
என்றும் பொருள் இலக்கணம் வகைமைப்பட்டு
விளங்குகின்றது.
இறையனார் களவியலுரை
எழுதப் பெற்ற காலத்திற்கு முன்னமே அல்லது கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டுக்கு
முன்னரே, தொல்காப்பியரின் செய்யுளியலை ஒட்டித் தனித்த யாப்பிலக்கண
நூல்கள் தோன்றிவிட்டன. சிலர், தொல்காப்பியரின் செய்யுளியலை
யாப்பதிகாரம் என வழங்கவும்
தலைப்பட்டிருந்தனர். எனவேதான் இறையனார் களவியல் உரைகாரர் யாப்பு ஒன்றினையும்
கூட்டி இலக்கண வகை நான்கு என்றார்.
நன்னூல் ஆசிரியர் பவணந்தியார்க்கு முன்பே,
அஃதாவது கி.பி.13ஆம் நூற்றாண்டிற்கு முன்னமே, தொல்காப்பியரின் உவம
இயலையும், வடமொழித் தண்டியாசிரியரின் அலங்காரத்தையும்
ஒட்டி அணியிலக்கண நூல்கள்
தோன்றத் தொடங்கின. நன்னூல் காலத்தில் இலக்கணம் ஐவகைப்பட்டதை அறிகின்றோம்.
வண்ணச்சரபம் தவத்திரு. தண்டபாணி சுவாமிகள் புலமை
இலக்கணம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினார்கள். இன்று,
தமிழிலக்கணம் அறுவகைப்பட்டு நிற்கின்றது. எனினும், ஐவகை இலக்கணம் என்பதே
பெருவழக்கு.
அகம்
என்பதன் விளக்கம்
அகமாவது,
இவ்வுலகத்து வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை முறைகள் இரண்டனுள் ஒன்றாகும்.
மற்றொன்று புறம்.
‘அகமாவது, ஒத்த அன்பினராகிய
தலைவனும் தலைவியும்
தம்முள் கூடுகின்ற காலத்துப் பிறந்து, அக்கூட்டத்தின்
பின்னர்,
அவ்விருவராலும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக
இவ்வாறு இருந்தது எனக் கூறப்படாததாய்,
எப்பொழுதும்
உள்ளத்து உணர்வாலேயே அனுபவிக்கப்படும் இன்பம்; இன்பம்
பற்றி அகத்தே நிகழும் ஒழுக்கத்தை அகமென்றது ஆகுபெயர்’
என்றதொரு விளக்கத்தை நச்சினார்க்கினியர் வரைந்துள்ளார்.
இங்கு ஆகுபெயர் என்றது இடவாகு பெயரை. இடம்
- மனம்;
அகம்.
புறம்
என்பதன் விளக்கம்
புறமாவது,
மேற்கூறிய ஒத்த அன்புடையார் தாமேயன்றி,
எல்லாராலும் அனுபவித்து உணரப்பட்டு, இவை இவ்வாறிருந்தன
என்று பிறருக்கும் புறத்தார்க்கும் கூறப்படுவதாய்
அறமும்
பொருளும் என்னும் இயல்பினை உடையதாய்ப் புறத்தே நிகழும்
ஒழுக்கமாம். இவ்வொழுக்கத்தைப் புறமென்றதும் ஆகுபெயர்
இலக்கணம் பற்றியேயாம். புறம்-வெளி. இதுவும் அகம் என்பதைப்
போல இடவாகு பெயரே,
தன்
மதிப்பீடு : வினாக்கள் - I
|
1) |
இன்று
தமிழ்மொழி எத்தனை வகைமைப்பட்டுள்ளதாகச் சொல்கின்றனர்? |
விடை |
2) |
இயற்றமிழுள்
அடங்கும் நூல்கள் யாவை? |
விடை |
3) |
இலக்கணம்
என்பதன் பொருள் யாது? |
விடை |
4)
|
இன்று தமிழிலக்கணம் எத்தனை வகைமையுற்றுள்ளது? அவை யாவை? |
விடை |
5) |
புறம்
என்பதன் விளக்கம் யாது? |
விடை |
|