2.4 தொகுப்புரை

மாணாக்கர்களே! இந்தப் பாடத்தின் வழி நாம் அறிந்து கொண்டவற்றைத் தொகுத்துக் காண்போம்.

  • எழுத்து என்பது காரணப்பெயர்.
  • எழுத்து என்பதன் வரைவிலக்கணம்
  • எழுத்துகளின் வகை
  • ஆய்த எழுத்து ஒருகால் மெய்; ஒருகால் உயிர்
  • அசைக்கு உறுப்பாகும் எழுத்துகள் பதின்மூன்று

தமக்குரிய இயல்பான மாத்திரையில் ஒலிப்பன, குறில், நெடில், உயிர், மெய், வல்லினம், மெல்லினம், இடையினம், ஆய்தம் என்பன.

உயிரும் மெய்யும் கூடி ஒலிப்பது உயிர்மெய். உயிர்மெய்க்கு அதனை ஏறிய உயிரின் அளவே அளவு.

தமக்குரிய மாத்திரையில் குறைந்து ஒலிப்பன, குற்றியலிகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம் என்னும் மூன்று.

அளபெடை இருவகைப்படும். அவை: உயிரளபெடை, ஒற்றளபெடை.

 
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
யாப்பருங்கலக்காரிகை அசைக்குறுப்பாக எத்தனை வகை எழுத்துகளைக் கொள்கின்றது?
2.
அசைக்குரிய உறுப்பாகிய எழுத்துகள் பதின்மூன்றனையும் எத்தனை பாகுபாட்டில் அடக்கலாம்?
3.
தமக்குரிய இயல்பான மாத்திரையில் ஒலிக்கும் எழுத்துகள் யாவை?
4.
தமக்குரிய மாத்திரையில் குறைந்தொலிப்பன எவ்வெவ்வெழுத்துகள்?
5.
தமக்குரிய மாத்திரையின் குறைந்தொலிப்பனவற்றுள் எந்த மூன்றனைக் காரிகையாசிரியர் கொண்டார்?
6.
யாப்பு இலக்கணம் குற்றியலிகரம் எத்தனை என்கின்றது?
7.
மொழி முதலில் நிற்கும் ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம் ஆகியவற்றுக்குத் தனித்தனி மாத்திரை எவ்வளவு?
8.
அளபெடுக்கும் மெய்கள் யாவை?
9.
மாத்திரை என்பது யாது?
10.
உயிர்மெய்யின் மாத்திரை எதனுடைய அளவே ஆகின்றது?