சமூகத்தைப் படம் பிடித்துக் காட்டுவதில் திரைப்படத்திற்குப்
பெரிதும் இடமுண்டு. திரைப்படப்பாடல்கள் மக்கள் மனத்தை
மாற்றும் சக்தியாகக் கருதப்படுகின்றன. மனிதர்களின் வாழ்க்கை,
தத்துவம், அறம், இன்பம், துன்பம் எல்லாவற்றையும் உள்ளடக்கி,
திரைப்படப் பாடல்கள் எழுதப்பட்டன. அந்த வரிசையில்
கவிஞர் கண்ணதாசன், மக்கள் கவிஞர்
பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம் ஆகியோர் சிறப்பிடம்
பெறுகின்றனர்.
கண்ணதாசன்
திரைப்படம் மூலம் பல கவிதைகளை இலக்கியநயம் சொட்டச்
சொட்டப் பாடியவர். தனிக்கவிதைகள், திரையிசைப் பாடல்கள்,
கதை பொதிந்த பாடல்கள், கவிதைக் குறு நாடகங்கள்
எழுதியுள்ளார். கண்ணதாசனின் திரையிசைப் பாடல்கள் இனிமை
நிறைந்தவை. தாலாட்டுப் பாடல் தொடங்கி, மரணத்தைப் பாடுவது
வரை கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசன்தான்.
உதாரணமாக,
மலர்ந்தும்
மலராத பாதிமலர் போல
வளரும் விழி வண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப்பொழுதாக
விளைந்த கலை அன்னமே
(திரைப்படம் : பாசமலர்)
என்ற பாடல் தாலாட்டுப் பாடலாக ஒலிக்கிறது.
இந்தப் பாடலைப் பாடும்போது, தொட்டிலை இழுத்து ஊஞ்சல்போல ஆட்டினால் தொட்டில்
முன்னும், பின்னும் போய்வரும் ஓசை இந்தப் பாடலில் அமைந்திருப்பதைப் பாடி
உணரலாம்.
வீடுவரை
உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசிவரை யாரோ
என்ற பாடல் ஒரு மனிதன் இறந்துபோனால் அவனுக்காக
அழக்கூடியவர்களில் உறவினர்கள் வீடுவரையிலும், மனைவி
வீதிவரையிலும் அழுதுகொண்டு செல்வார்கள் என்பதும், பிள்ளை
சுடுகாடு வரை செல்வான் என்பதும் சொல்லி, கடைசி வரை
யாருமில்லை என்பதை வாழ்க்கைத் தத்துவமாகப் பாடியுள்ளார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
மக்கள் படைத்த கலைகள் மக்களின் வாழ்க்கை உயர
வழிவகுக்க வேண்டும். அந்த வகையில் பாடல் மூலம் பாரதியும்,
பாவேந்தரும் ஒரு பெரிய எழுச்சியை, இந்திய தேசியத்தை, தமிழ்த்
தேசியத்தை எழுப்பினர். திரையுலகில் கண்ணதாசனைப்போலவே,
கவிஞர் பட்டுக்கோட்டையார் மக்கள் நெஞ்சம் மகிழப் பாடினார்.
தமிழகத்தில், ஏழை உழைப்பாளிகள், அறிவால் உழைக்கும்
இடைநிலை மக்கள் ஆகியவர்களுக்காகத் திரையுலகிலே குரல்
கொடுத்து, அவர்கள் வாழ்க்கையை முன்னேற்றப் பாடியவர்
கல்யாணசுந்தரம்.
சமுதாயத்திலே, மக்களிடையே வேற்றுமை உணர்வு மிகுந்து
காணப்படுகிறது. அது, கவிஞரைப் பாதிக்கிறது. அதனை
விளக்க, ஒரு கற்பனை கலந்த பாடலைப் பாடுகிறார்.
விண்ணையிடிக்கும் மலைமுகட்டிலே அருவிகள்
தோன்றுகின்றன. அந்த அருவிகள் பொழியும் நீர் கடலில் சென்று
கலக்கிறது. ஆனால் தனிமனிதனோ சமுதாயம் என்ற கடலில்
கலப்பதில்லை. உயர்வு, தாழ்வு என்ற வேறுபாட்டை வளர்க்கிறான்.
இதனை விளக்கும் பாடல் கீழே தரப்படுகிறது.
உச்சி
மலையிலே ஊறும் அருவிகள்
ஒரே வழியிலே கலக்குது
ஒற்றுமையில்லா மனிதகுலம்
உயர்வும் தாழ்வும் வளர்க்குது
(மக்கள் கவிஞர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்)
|
கல்யாணசுந்தரம் விவசாயக் கவிஞர்
உழைப்பாளிகளுக்காகப் பாடியவர்
மூடநம்பிக்கையை எதிர்த்தவர்
மக்களுக்காகப் பாடியதால் மக்கள் கவிஞர் என
அழைக்கப்படுகிறார்.
|
தன்மதிப்பீடு : வினாக்கள் - I |
1) |
கவிதைக்குத் தேசிகவிநாயகம் கூறிய விளக்கம் யாது? |
|
2) |
மரபுக்கவிதை என்பதற்கு விளக்கம் தருக. |
|
3) |
இந்திய தேசியம் பற்றிப் பாடிய கவிஞர்கள் யார்? |
|
4) |
புரட்சிக் கவிஞர் என்று போற்றப்படுபவர் யார்? |
|
5) |
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் யாரைப் பற்றி
அதிகமாகப் பாடினார்? |
|
|