தஞ்சைவாணன்
கோவையில் 3 இயல்கள், 33 பிரிவுகள், 425 பாடல்கள் உள்ளன. அவை,
(1) களவியல் - 18 பிரிவுகள் - 280 பாடல்கள்
(2) வரைவியல் - 8 பிரிவுகள் - 86 பாடல்கள் (3)
கற்பியல் - 7 பிரிவுகள் - 59 பாடல்கள்
ஆகியன.
களவியல் என்பது தலைவன் தலைவியின் திருமணத்துக்கு
முன் உள்ள காதல் வாழ்க்கை பற்றிய இயல். தலைவியைத் தலைவன் முதன்முதல் பார்ப்பது
தொடங்கிக் காதலித்துப், பின் திருமணத்திற்காக அவன் பொருள் தேடிப் பிரிந்து
செல்லுதல் வரை உள்ளவை களவியலில் கூறப்பட்டுள்ளன. வரைவு என்றால் திருமணம் என்று பொருள். திருமணத்திற்காகத்
தலைவனும் தலைவியும் முயல்வது தொடங்கித் திருமணம் செய்து கொள்ளுதல் வரை உள்ளவை
வரைவியலில் கூறப்பட்டுள்ளன.
|
|
|
|
திருமணம் செய்து கொள்ளுதல் |
|
கற்பியல் என்பது திருமணத்திற்குப் பின் உள்ள குடும்ப
வாழ்க்கையைப் பற்றிய இயல் ஆகும்.
|