1.7 தொகுப்புரை

மாணவ நண்பர்களே! இதுவரை இந்தப்பாடத்திலிருந்து பெற்ற செய்திகளை ஒருமுறை நினைவுகூட்டிப் பார்ப்போமா?

தருமொழி, பெறுமொழி, வழிமொழி, மொழிபெயர்ப்பாளர் என்ற நிலைகளில் கருத்துகளை மொழிபெயர்ப்பது என்பது என்ன என்று அறிந்து கொண்டீர்கள்.
அறிவியல் மொழிபெயர்ப்பும் அதில் குறியீடுகளும், சமன்பாடுகளும், எப்படி அமையவேண்டும் என்பதை அறிந்திருப்பீர்கள்.
இலக்கிய அல்லது கலைத்துறை மொழிபெயர்ப்பைப் பொருத்தவரை கவிதை மொழிபெயர்ப்பு என்பது சிக்கலானதாக இருந்தாலும் கவிதையாக அமைக்க முடியவில்லை என்றால் உரைநடைப்பாங்கில் அமையலாம் என்றும், கருத்துகளை மொழிபெயர்க்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சமூக, பண்பாட்டுக்கூறுகள் பற்றியும் மொழிவழக்குகள் பற்றியும் அறிந்திருப்பீர்கள்.
சிறந்த மொழிபெயர்ப்பு என்பது எப்படி அமையலாம் என்பதற்கான கருத்துகளையும் அறிந்திருப்பீர்கள்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1

மொழிபெயர்ப்பின் இரு களங்கள் எவை?

விடை
2

அறிவியல் மொழிபெயர்ப்பு எப்படி இருக்கவேண்டும்?

விடை
3

கலைச்சொல் என்றால் என்ன?

விடை
4

புனைகதைகளின் மொழிபெயர்ப்பில் பின்பற்ற வேண்டியவை யாவை?

விடை
5 சிறந்த மொழிபெயர்ப்பு என்பது என்ன? விடை
6 குறியீடுகளை எப்படிக் கையாள வேண்டும்? விடை