1.4 தொகுப்புரை

பழந்தமிழ் நூல்களில் சைவம் என்ற இப்பாடத்தில், தொல்காப்பியம் தொடங்கிக் கல்லாடம் வரையிலான நூல்களில் காணப்படும் சைவம் பற்றிய அரிய குறிப்புகள் திரட்டி வழங்கப்பட்டுள்ளன. பிற்காலத்தே சைவத்திருமுறைகளும், சிற்றிலக்கியங்களும் தோற்றம் கொள்வதற்கு உரிய தூண்டுகோலை இவை வழங்கியுள்ளதை அறியலாம்.

சங்க இலக்கியத்திலும் சங்கம் மருவிய நூல்களிலும் ‘சிவன்’ என்னும் பெயர் காணப்படவில்லை. சிவனுக்குரிய அடையாளங்களே (பிறை அணிதல், திரிபுரம் எரித்தல், நெற்றிக்கண் முதலியன) கூறப்பட்டுள்ளன. காப்பியங்களில் மணிமேகலையே முதன் முதலாகச் சைவம், சைவவாதி என்ற சொற்களைப் பயன்படுத்தியுள்ளது. ஈசன் என்ற சொல் சிவனைக் குறிக்க ஆளப்பட்டுள்ளனது. கல்லாடம், பின்வந்த துதி நூல்களுக்கு வழிகாட்டி. இதுபோன்ற பல செய்திகளை இந்தப் பாடத்தின் வழி அறிந்து கொண்டோம்.



 


தன்மதிப்பீடு : வினாக்கள் - II

1.
சிவனைக் குறிப்பதாகக் கொள்ளக் கூடிய திருக்குறள் தொடர் ஒன்றினைக்  கூறவும். விடை
2.
பிறவா யாக்கைப் பெரியோன் என்ற தொடர் இடம்பெறும் நூல் எது? அது யாரைக் குறிக்கும்? விடை
3.
மணிமேகலை சிவபெருமானை எப்பெயரால் குறிப்பிடுகிறது? விடை
4.
சைவம், சைவவாதி என்ற தொடர்களை எந்த நூல் முதலில் பயன்படுத்தியுள்ளது? விடை
5.
சிவனைப் போற்றிப்பாடும் நூல்களுக்கு முன்னோடியாக அமைந்த நூல் எது? விடை