3.6 தொகுப்புரை

நண்பர்களே! மேற்கண்ட பாடத்தின் மூலம் மூன்று சிறுகதைகளின் கருப்பொருள், கதைப்பொருள், வாழ்க்கைப் பயன், சமூகப்பயன் ஆகியவற்றை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்தில் நீங்கள் அறிந்து கொண்ட செய்திகளை மீண்டும் நினைவுபடுத்திப் பாருங்கள்.

கல்கியின் 'கேதாரியின் தாயார்', அகிலனின் 'புயல்', ஜெயமோகனின் 'கடைசிவரை' ஆகிய சிறுகதைகளின் கதை, கருப்பொருள் மற்றும் அதன் வாழ்க்கை, சமூகப் பயன்களையும் படிப்பினையாக அறிந்துகொள்ள முடிந்தது. இறுதியாக இம்மூன்று கதைகளின் மொழிப்பயனும், இலக்கியப்பயனும் இலக்கியத் தரத்திற்குரியதாக இச்சிறுகதைகளை உயர்த்தியுள்ளதையும் காணமுடிகிறது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.

'கடைசிவரை' சிறுகதையின் கருப்பொருள் யாது?

2.

நாடோடிகளின் சிறப்பு யாது?

3.

பெண்களுக்கு இழைக்கப்படும் சமூகக் கொடுமையைக் காட்டும் சிறுகதை எது?

4.

மூன்று சிறுகதைகளிலும் இடம் பெற்றுள்ள சமூகச் சிக்கல்கள் யாவை?