அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகியவற்றை
கொண்டு பேசத்
தயங்கும் தலைவி, தன் விருப்பத்தை மறைமுகமாகத் தலைவனுக்கு
உணர்த்துகின்றாள். தலைவி தலைவனோடு வாழ்ந்த களவு
ஒழுக்கத்திலும், கற்பு ஒழுக்கத்திலும், அவன் மீது கொண்ட மிகுந்த
அன்பினை, அவளது சொற்களாலும்,
செயல்களாலும்
வெளிப்படுத்துகிறாள். தலைவன் தன் கண்ணினுள்ளும்,
நெஞ்சினுள்ளும் நிலைத்துள்ளான். எனவே, மை தீட்டலையும்,
சூடான உணவு அருந்துதலையும் புறக்கணித்தாள்.
இவற்றிலிருந்து,
தலைவிக்குத் தலைவன் மீதுள்ள மிகுந்த அன்பு,
எப்பொழுதும் அவனைச் சந்தித்து மகிழ வேண்டும் என்ற விருப்பம்,
அவளது மனநிலை, அவளது உள் உணர்வுகள் ஆகிய பண்புகள்
வெளிப்படும்.
|