|
4.5
தொகுப்புரை
இப்பாடத்தில் இதுவரை செய்யுள் உறுப்புகளுள்
தளை, அடி,
தொடை மற்றும் தொடை விகற்பங்கள் ஆகியவற்றைப் பார்த்தோம்.
அடிகள் எனும் தலைப்பில் அடி வகைகள்,
அடிகளுக்கான
பெயர்கள், பாக்களுக்கான அடிகளின் சிற்றெல்லை, பேரெல்லை
ஆகியவற்றைப் பற்றிய செய்திகளையும் அறிந்தோம்.
தொடை என்னும் தலைப்பில் செய்யுளுக்கு
ஓசை, சொல்நயம்
ஆகியவற்றைத் தரக்கூடியவற்றை அமைத்துள்ளனர். மோனை,
எதுகை, இயைபு, அளபெடை என்பன ஓசையோடு தொடர்புடையன.
முரண், இரட்டை, அந்தாதி என்பன சொல்லோடும், பொருளோடும்
தொடர்புடைய வகையில் உள்ளன. இந்த முதல் தொடைகள் எட்டு
எனப் பார்த்தோம். முதல் தொடை பாடலில் ஒவ்வோர் அடியிலும்
பார்க்க வேண்டியதாகும்.
மோனை முதலிய ஐந்து முதல் தொடைகளுக்கும்
தொடை
விகற்பங்கள் உண்டு. இத் தொடை விகற்பங்கள் நாற்சீர் உள்ள
அளவடிகளில் காண்பதற்கு உரியன.
|
தன்
மதிப்பீடு : வினாக்கள் - II
|
|
1.
|
எதுகைத் தொடை
எவ்வாறு வர வேண்டும் என
விளக்குக. |
|
|
2.
|
தொடை விகற்பங்களைப்
பெறும் முதல் தொடைகள்
யாவை? |
|
|
3.
|
செந்தொடையின்
இலக்கணம் யாது? |
|
|