1.8 தொகுப்புரை

வள்ளுவர் வாழ்ந்த காலத்தமிழ்ச் சமூகம், அரசியலில் - ஆட்சி
முறையில் எவ்வாறு சிறந்து விளங்கியது என்பதனை அரசியல்
எனும் இயலில், வள்ளுவர் கூறும் கருத்துக்கள் மூலம் தெரிந்து
கொள்ளலாம்.

சிறந்த நாகரிகமும் பண்பாடும் நிறைந்த ஒரு சமூகத்தில்தான்,
இத்தகைய நெறிமுறைகளை உடைய அரசனும், ஆட்சி முறையும்
அமைந்திருக்கும்.

அரசியல் என்ற தலைப்பில், அரசனுக்கு உரிய ஆறு பகுதிகளாகக்
கூறும் படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆகியவை
இன்றைய அரசியலாளருக்கும், ஆட்சிமுறைக்கும் கூட பொருந்தும்.

வள்ளுவரின் அரசியல் சிந்தனைகள், அறிவு முதிர்ச்சி பெற்ற ஒரு
தமிழ்ச் சமுதாயத்தின் வெளிப்பாடு எனலாம்.



தன் மதிப்பீடு : வினாக்கள் - II


1.


அமைச்சரின் தகுதிகள் யாவை?

2.

சொல்வன்மை எவ்வாறு இருக்க வேண்டும் என்று
வள்ளுவர் குறிப்பிடுகின்றார்?

3.

ஒருவரோடு நட்பு கொள்வதற்கு உரிய உரிமையை
எது கொடுக்கும்?

4.

அமைச்சருக்கு அடுத்த நிலையில் துணையாக
அமைய வேண்டியது எது?

5.

ஓர் அரசனின் கோட்டையின் அமைப்பு எவ்வாறு
இருக்க வேண்டும் என்று வள்ளுவர்
குறிப்பிடுகின்றார்?