|
இப்பாடத்தில், நாவல் எவ்வாறு உருவாக்கப்படுகிறது,
அதற்குக் கையாளும் நெறிமுறைகள், உத்திகள், நாவலின்
பகுதிகள் ஆகியவற்றைக் கற்றுள்ளீர்கள். நாவல் ஒன்றை
எழுதத் தொடங்கும் போது நாவலின்
அனைத்துப் பகுதிகளையும் அறிந்து கொள்ளுதல் நல்லது.
நாவல் எழுதும் பயிற்சியும்
முயற்சியும் தானே
ஏற்படவேண்டுமே அல்லாமல் அடுத்தவரால் ஏற்படுத்த
இயலாது. ஆனால் நாவல் எழுத ஓரளவு பயிற்சி அளிக்கலாம். |