Tamil Virtual Academy

TAMIL VIRTUAL ACADEMY - தமிழ் இணையக் கல்விக்கழகம்

Languages

Error message

  • Warning: Use of undefined constant locations - assumed 'locations' (this will throw an Error in a future version of PHP) in temple_current_location_block_view() (line 112 of /html/tamilvu/public_html/sites/all/modules/temple_current_location/temple_current_location.module).
  • Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

tamilnadu_temples_new

அம்பை அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

Other Names :

வேணுகோபால சுவாமி

Place :

அம்பாசமுத்திரம் நகர்

Taluk :

அம்பாசமுத்திரம்

District :

திருநெல்வேலி

Religious Type :

வைணவம்-பெருமாள்

Lord Name :

வேணுகோபாலகிருஷ்ணசுவாமி

Procession On God :

வேணுகோபாலகிருஷ்ணசுவாமி

Mother / Goddess Name :

ருக்மிணி, சத்தியபாமா

Temple Tree :

புன்னை

Tirukkulam / River :

ஹரிஹர தீர்த்தம்

Agamam :

பாஞ்சராத்திர ஆகமம்

Worship Time :

விஸ்வரூபம், உச்சிக்காலம், சாயரட்சை, திருவிசாகம்

Festivals :

வைகாசி விசாகம், கிருஷ்ண ஜெயந்தி, ஆடி சுவாதி, வைகுண்ட ஏகாதசி

History :

முன்னொரு காலத்தில் சேரமன்னன் ஒருவன் திருமாலுக்கு கோயில் கட்ட விரும்பினான். அவனது கனவில் பெருமாள் சத்தியபாமா, ருக்மிணியோடு புல்லாங்குழல் இசைத்து வேணுகோபாலராக காட்சியளித்தார். ஜீவநதியான தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள புன்னைவனத்தைச் சுட்டிக்காட்டி அவ்விடத்தில் தனக்கு ஆலயம் எழுப்புமாறு பணித்தார். மன்னனும் அவ்வாறே கனவில் கண்ட காட்சிபடியே திருவுருவங்களை கோயிலில் அமைத்தான்.

Protecting Company :

இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.

Nearest Temples Arc :

அம்பை காசிப நாதர் கோயில், மன்னார்கோவில் இராஜகோபாலசுவாமி கோயில்

Summary :

கி.பி.16-ஆம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம். இக்கோயிலின் கட்டடக்கலை அமைப்பை நோக்குங்கால் இது பிற்காலத்தியது எனத் தெரிகின்றது. இக்கோயிலில் கல்வெட்டுகள் எதுவும் இடம் பெறவில்லை. எனினும் கோயிலுக்கு சொந்தமான நன்செய் நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. அவற்றின் வருவாயில் கோயில் நிர்வாகம் நடைபெறுகிறது. எனவே இக்கோயிலுக்கு நிலக்கொடைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஏனோ அவை கல்வெட்டுகளாக இடம் பெறவில்லை. இக்கோயில் மூலவர் எப்போதும் துணைவியரான ருக்மிணி, சத்தியபாமையுடன் இருப்பதால் நித்யகல்யாணப் பெருமாள் என்று வழங்கப்படுகிறார். இங்கு சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. இங்கு வேணுகோபாலரே தனது நாச்சியார்களுடன் தீர்த்தவாரி காண்கிறார். இக்கோயில் கருவறை சதுர வடிவமானது. மூலவர் நின்ற நிலையில் உள்ளார். அதனையடுத்து உள்ள மண்டபத்தில் உருளைத்தூண்கள் இருவரிசையில் உள்ளன. நடுவில் உற்சவமூர்த்தி திருவுருவம் அமைந்துள்ளது. அதனையடுத்து முகப்பில் துவாரபாலகர் திருவுருவங்கள் வரையப்பட்டுள்ளன. கருவறை விமானம் ஏக தளமுடையதாக உள்ளது. திராவிடப்பாணியில் அதாவது சிகரம் (தலை) எட்டுப்பட்டை உடையதாக உள்ளது. கூரைப்பகுதிக்கு மேல் சுதையால் உருவாக்கப்பட்டுள்ளது. கருவறை விமானத்தின் தாங்குதளத்தினையடுத்து சுவர்ப்பகுதியில் அரைத்தூண்கள் அமைந்துள்ளன. கோட்டங்கள் வெற்றிடமாக உள்ளன. சிற்பங்கள் இடம் பெறவில்லை. கூரைப்பகுதியில் கொடுங்கையில் கூடுமுகங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சில திருமால் வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சுற்றில் வாகன மண்டபம் அமைந்துள்ளது. அவற்றில் கருடன், அனுமன் உள்ளிட்ட பல வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

Period / Ruler :

கி.பி.16-ஆம் நூற்றாண்டு / மதுரை நாயக்கர்

Inscription / Copper :

இல்லை

Murals :

இல்லை

Sculptures :

கருவறையில் மூலவர் வேணுகோபால சுவாமி நேபாள கண்டகி தீரத்தில் உள்ள சாளக்கிராமத்தினால் ஆனவர். மூலவர் ருக்மிணி, சத்தியபாமாவோடு காட்சியளிக்கிறார். சக்கரத்தாழ்வார் இங்கு உள்ளார். இக்கோயிலின் வடபுறம் உள்ள ஹரிஹர தீர்த்தம் என்ற குளத்தின் நடுவில் உள்ள மண்டபத்தில் சிவன், கிருஷ்ணன் ஆகியோர் திருவுருவங்கள் காணப்படுகின்றன. கிருஷ்ணன் புல்லாங்குழலூதி நின்றபடி காட்சியளிக்கிறார். மேலும் இக்கோயில் திருக்கதவுகள் இரண்டிலும் பெருமாளின் தசாவதாரக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

Temple Structure :

இக்கோயில் கருவறை சதுர வடிவமானது. மூலவர் நின்ற நிலையில் உள்ளார். அதனையடுத்து உள்ள மண்டபத்தில் உருளைத்தூண்கள் இருவரிசையில் உள்ளன. நடுவில் உற்சவமூர்த்தி திருவுருவம் அமைந்துள்ளது. அதனையடுத்து முகப்பில் துவாரபாலகர் திருவுருவங்கள் வரையப்பட்டுள்ளன. கருவறை விமானம் ஏக தளமுடையதாக உள்ளது. திராவிடப்பாணியில் அதாவது சிகரம் (தலை) எட்டுப்பட்டை உடையதாக உள்ளது. கூரைப்பகுதிக்கு மேல் சுதையால் உருவாக்கப்பட்டுள்ளது. கருவறை விமானத்தின் தாங்குதளத்தினையடுத்து சுவர்ப்பகுதியில் அரைத்தூண்கள் அமைந்துள்ளன. கோட்டங்கள் வெற்றிடமாக உள்ளன. சிற்பங்கள் இடம் பெறவில்லை. கூரைப்பகுதியில் கொடுங்கையில் கூடுமுகங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சில திருமால் வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சுற்றில் வாகன மண்டபம் அமைந்துள்ளது. அவற்றில் கருடன், அனுமன் உள்ளிட்ட பல வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

Location :

அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருக்கோயில், அம்பாசமுத்திரம் நகர் வட்டம், திருநெல்வேலி-627401

Phone :

04634-250555

Website :

Email :

Temple Opening Time :

காலை 6.00 -10.00 முதல் மாலை 5.30-8.30 வரை

Way :

திருநெல்வேலி-பாபநாசம் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள அம்பாசமுத்திரத்தின் நுழைவாயிலில் இக்கோயில் அமைந்துள்ளது.

Nearby Bus Station :

திருநெல்வேலி, தென்காசி

Nearby Railway Station :

திருநெல்வேலி, தென்காசி

Nearby Airport :

மதுரை

Accommodation :

அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி
சாலை வரைபடம்
Updated Date : 16-09-2026 11:30:33 IST