முகப்பு

தொடக்கம்

xi

லியவற்றால் நேர்ந்த பிழைகளைத் திருத்திக்கொள்ளுமாறு அறிஞர்களை வேண்டிக்கொள்ளுகின்றேம். அன்றியும் உண்மையான பிழைகளை அறிஞர்கள் எமக்கு அறிவிப்பின், அவற்றை அவர்கள் பெயரோடும் இரண்டாம் பதிப்பில் வெளிப்படுத்துவேம். அன்றி நன்னூல் சின்னூன் முதலிய சிற்றிலக்கணங்களைத்தானும் முறையுறக் கல்லாதும், ஆழ்ந்து நோக்காதும் பேர்வேண்டிப் பிழைகூறி ஆரவாரிக்கும் அவல மாக்கள் செயலை யாம் ஒரு பொருட்படுத்தேம். அவர்கள் தாமே கூறித் தாமே மகிழ்ந்துகொள்வார்களாக.

“குணநாடிக் குற்றமு நாடி யவற்றுண்
 மிகைநாடி மிக்க கொளல்.”

இவ்வுரையுள், மெய்ப்பாட்டியற் பொருள்களையும், உவம இயற் பொருள்களையும் எளிதினறிந்து கோடற்குபகாரமாக, அவ்வியல்களின் பொருள்களைச் சுருக்கி எழுதி, எழுதிய அச்சுருக்கங்களை அவ்வியல்களின் முகப்பிலே தந்துள்ளேம். அன்றியும், அவ்வியல்களின் பொருள்களை எளிதின் விளங்கிக் கோடற்குபகாரமாக, அவ்வியல்களில் வருமுதாரணச் செய்யுள்களுக்குப் பொருளு மெழுதி அவ்வியல்களின் பின்னாற் சேர்த்துள்ளேம். ஏனைய வியல்களுக்கு விரிவஞ்சி அவை எழுதாது விடப்பட்டன. அவற்றில் வரும் அரும்பதங்களின் பொருள்களைப் பின்னாற் சேர்க்கப்பட்டிருக்கும் அரும்பதவகராதி நோக்கியறிந்துகொள்க.

யாம் எழுதிய உரைவிளக்கக் குறிப்புக்களைப் பலமுறை நுண்ணிதாகப் படித்துப் பார்த்து இன்றியமையாத சில திருத்தங்கள் செய்து துணைபுரிந்த, திருநெல்வேலி ஆசிரிய கல்லூரித் தலைமைத் தமிழாசிரியரும், எமது ஆசிரியருளொருவராகிய சுன்னாகம் வித்துவமணி ஸ்ரீமான் அ. குமாரசுவாமிப் புலவரவர்களிடம் முறையாகக் கற்று விற்பன்னராய் விளங்குபவருமாகிய பண்டிதர் ஸ்ரீமான் சி. கணபதிப்பிள்ளை யவர்களுக்கு யாஞ் செய்யக்கிடந்த கடப்பாடு யாதென அறியேம். அவர்கள் செய்த நன்றியும், அவர்கள் நுண்மதியும் என்றுமெம்மாற் பாராட்டப்படத் தக்கனவே.

இன்னும், வடமொழி நூல்களுட் கூறிய மெய்ப்பாட்டிற்குரிய சில இலக்கண விதிகளை யாம் அறிதற்குத் துணைபுரிந்த,

முன் பக்கம்

மேல்

அடுத்த பக்கம்