| பொருத்தமும் விருத்தமும் திருத்தமுங் காட்டுங் குறிப்பும் விளக்கமு நெறிப்பட வமைத்துப் பேரா சிரியப் பெருநா வலன்றன் உரைதனைத் தெளிவுற வுணர்த்துமோ ருரைதனை |
30 | திருவருள் கூட்டச் செய்தனன்; யாரெனின்; பொன்னிலங் காபுரிப் பொற்கொடி தனாது சென்னியி லணிந்த திருமணி முடிபோல் மன்னுயாழ்ப் பாண வளநக ரதனில் நன்னா வலர்புகழ் புன்னாலைக் கட்டுவன் |
35 | வளமிகு பதியுதி யிளவள ஞாயிறு; கடவுட் கற்பிற் காசிபன் மரபு புடவியில் விளக்கப் புகுந்த புதுமதி; முந்நூல் மந்திர முதுமறை யாளன்; சிந்நயக் குரிசில் செய்த மாதவம்; |
40 | தூவமர் தண்டமிழ்ப் பூவலயந் தொழும் நாவலர் பெருமான் நயந்திடு மருமான் தத்துவ நெறியறி வித்துவ சிரோமணி பொன்னம் பலப்பெயர்ப் புண்ணிய னிடத்தும் மன்னிய வளம்பெறு சுன்னைமா நகரான் |
45 | குறுமுனி யென்ன வறிவினி லுயர்ந்தோன் மறுவறு குமார சுவாமியென் றோதும் வரமுறு புலவன் மாட்டும் பெறுமிறை தொன்னூற் கல்வித் துறையெலா மொருங்கே பன்னாட் பயின்று பழகிய பண்டிதன்; |
50 | இலக்கியப் பொன்மலை; இலக்கண வரநதி; நலத்தகு சைவ நன்னூற் பாற்கடல்; புண்ணிய நீறு சண்ணித்த மேனியன் அண்ணலைந் தெழுத்து மெண்ணுநன் னாவினன்; முன்னவன் சேவடி மன்னிய வுளத்தன்; |
55 | கற்றவர் விழையுங்கணேசைய னென்னும் அற்புத நாமத் தருந்தவ; னதனைக் கடும்போ ரேதுவிற் காகிதம் முட்டி இடும்பைமீக் கூர விரங்குமிந் நாளிற் கண்கவர் வனப்பு மெண்பெறு சிறப்பும் |
60 | நன்கொருங் கமைய வின்புடன் முயன்றே |
|
|