| எழுதா வெழுத்திற் பழுதறப் பதிப்பித் துழுவ லன்புட னுலகினுக் களித்தனன், மன்னிய சிறப்பிற் சுன்னையம் பதியிற் றிருமகள் நிலையத் தொருதனி யதிபதி |
65 | ஈழ கேசரித் தாளினைப் பரப்புந் தாழாச் சிறப்பிற் றண்டமி ழறிஞன் நன்னய மிகுந்தபொன்னைய நாமம் மண்ணகம் விளங்கிட வந்த புண்ணிய முயற்சிப் புகழ்ப்பெரி யோனே. |
______ கொழும்பு அரசினர் கல்லூரித் தமிழாசிரியராயிருந்தவரும்,வித்தகப் பத்திராசிரியரும்,சுன்னாகம், அ. குமாரசுவாமிப் புலவரவர்களிடங் கற்றுவிற்பன்னராகி விளங்குபவருமாகிய தென்கோவை, பண்டிதர் ஸ்ரீமாந் ச. கந்தையபிள்ளை அவர்கள் இயற்றியது. ஆசிரியப்பா | அமிர்தமா ருருவா மருணிலை யளிக்குந் தொல்காப் பியனெறி தோன்றத் தெரிக்குந் தொல்காப் பியமெனுந் தொல்லிய னூலின் மெய்ப்பாடு முதலாச் செப்புநான் கியலையும் |
5 | பேரா சிரியராம் புலவர் பெருந்தகை உலகிய னாடி யுஞற்றுபே ருரையுடன் பிரதிபல கொண்டு வழுவற நாடிக் கற்றோர் மற்றோர் யாவருங் கையுறு கனியெனச் செம்பொருள் கண்டுநனி மகிழக் |
10 | குறிப்புரை விரிவா னெறிப்பட நிகழ்த்தினன்; பன்மாண் புறுவளம் பழுநிய தொன்மா இலங்கைப் பெயரிய வீழநன் னாட்டின் திருமுக மாகி மருவியாழ்ப் பாணப் புன்னையம் பதியிற் றன்னிகர் காசிப |
15 | குலவிளக் காகிக் குலவுபே ரறிஞன்; |
|