அளவிட்டுக் கூறல் இயலாது. தமிழிலக்கணங்களில் தொன்மை
வாய்ந்தனவும் சிறந்தனவுமாகிய
தொல்காப்பியம் பொருளதிகாரம் (நச்சினார்க்கினியர்
பேராசிரியர் உரையுடன்), யாப்பருங்கல விருத்தியுரை,
இறையனாரகப்பொருளுரை, பேரகத்தியத் திரட்டு,
இராமானுச கவிராயர் சங்கர நமச்சிவாயப் புலவர்
சிவஞான முனிவர் முதலிய உரையாசிரியர்களின்
உரைகளைத்தழுவி எழுதப்பட்ட
நன்னூல் காண்டிகையுரை முதலியவற்றை இவர்
தம் பொருளைக்கொண்டு வெளியிட்டிருக்கின்றனர்.
இவரால் இயற்றப்பட்ட நாடகங்களும் மொழிபெயர்ப்பு
நூல்களும் பல. இவர் இயற்றிய நாடகங்கள் இலண்டன்மா
நகரத்தில் மாட்சிமை தங்கிய
ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியாரும் மேரி மகாராணியாரும் கண்டு களிக்க
அவர்கள் முன்னிலையில் நடித்துக் காட்டப்பட்டமை
இங்குக் குறிப்பிடத் தக்கது.
இவர் சென்னைப் பல்கலைக்
கழகத் திராவிட வாசக சங்கத்திற்குத் தலைவராயும், மேற்படி பல்கலைக் கழக அதிகாரிகளால்
நியமிக்கப்பட்ட திராவிடச் சொற்றொடராக்கச்
சங்கத்தின் அங்கத்தினராயுமிருந்திருக்கிறார்;
தென்னிந்திய ஆராய்ச்சிக் கழகத்தின் சபாநாயகருக்குப்
பிரதிநிதியாய்1 இருந்திருக்கிறார். இவர் இயற்றிய நூல்களிற் பல, பல்கலைக் கழகச் சார்பில் நடைபெறும் கல்லூரிகளின் மாணவர்களுக்கும் உயர்தரப் பாடசாலைகளிற் பயிலும் மாணவர்களுக்கும் பாடபுத்தகங்களாக அமைக்கப்பட்டன.
இவரியற்றிய வாசக பாடங்கள் இளஞ்சிறார்க்குப்
பயன்பட்டு வருகின்றன.
இவர் தலைவராயும் அங்கத்தவராயும்
அமர்ந்து தொண்டாற்றிய கலைக் கழகங்களும்
சபைகளும் பலவாகும். அக்கழகங்களும் சபைகளும் இவரைப் பெரிதும் பாராட்டி உள்ளன. அவற்றைப்பற்றிய குறிப்புகள் யாவும் இவரது வாழ்க்கை வரலாற்றைக் கூறும் விரிவான நூலில் வெளி வருமாதலின்,
விரிவஞ்சி இங்கு விடப்பட்டன.
இவர் அரசாங்கத்தாரால் பெற்ற
பட்டங்களும் பரிசுகளும் மதிப்புரைகளும் பல. 1889-ஆம் ஆண்டு உத்தியோகத்திற் சேர்ந்த இவர் படிப்படியாக உயர்ந்து, 1908-ஆம்
ஆண்டு
1. Vice- President |