முகப்பு |
இளநாகனார் |
151. குறிஞ்சி |
நல் நுதல் பசப்பினும், பெருந் தோள் நெகிழினும், |
||
கொல் முரண் இரும் புலி அரும் புழைத் தாக்கிச் |
||
செம் மறுக் கொண்ட வெண் கோட்டு யானை |
||
கல் மிசை அருவியின் கழூஉஞ் சாரல் |
||
5 |
வாரற்கதில்ல-தோழி!-கடுவன், |
|
முறி ஆர் பெருங் கிளை அறிதல் அஞ்சி, |
||
கறி வளர் அடுக்கத்து, களவினில் புணர்ந்த |
||
செம் முக மந்தி செய்குறி, கருங் கால் |
||
பொன் இணர் வேங்கைப் பூஞ் சினைச் செலீஇயர், |
||
10 |
குண்டு நீர் நெடுஞ் சுனை நோக்கிக் கவிழ்ந்து, தன் |
|
புன் தலைப் பாறு மயிர் திருத்தும் |
||
குன்ற நாடன் இரவினானே! | உரை | |
இரவுக்குறிச்சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.-இளநாகனார்
|
205. பாலை |
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து, |
||
ஆளி நன் மான், வேட்டு எழு கோள் உகிர்ப் |
||
பூம் பொறி உழுவை தொலைச்சிய, வைந் நுதி |
||
ஏந்து வெண் கோட்டு, வயக் களிறு இழுக்கும் |
||
5 |
துன் அருங் கானம் என்னாய், நீயே |
|
குவளை உண்கண் இவள் ஈண்டு ஒழிய, |
||
ஆள்வினைக்கு அகறிஆயின், இன்றொடு |
||
போயின்றுகொல்லோ தானே-படப்பைக் |
||
கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர் |
||
10 |
நீர் மலி கதழ் பெயல் தலைஇய |
|
ஆய் நிறம் புரையும் இவள் மாமைக் கவினே! | உரை | |
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லி, செலவு அழுங்கியது. தோழி செலவு அழுங்கச் சொல்லியதூஉம் ஆம்.-இளநாகனார்
|
231. நெய்தல் |
மை அற விளங்கிய மணி நிற விசும்பில் |
||
கைதொழும் மரபின் எழு மீன் போல, |
||
பெருங் கடற் பரப்பின் இரும் புறம் தோய, |
||
சிறு வெண் காக்கை பலவுடன் ஆடும் |
||
5 |
துறை புலம்பு உடைத்தே-தோழி!-பண்டும், |
|
உள் ஊர்க் குரீஇக் கரு உடைத்தன்ன, |
||
பெரும் போது அவிழ்ந்த கருந் தாட் புன்னைக் |
||
கானல்அம் கொண்கன் தந்த |
||
காதல் நம்மொடு நீங்காமாறே. | உரை | |
சிறைப்புறமாகத் தோழி சொல்லி, வரைவு கடாயது.-இளநாகனார்
|