முகப்பு |
மருதன் இளநாகனார் |
21. முல்லை |
விரைப் பரி வருந்திய வீங்கு செலல்இளையர் |
||
அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ, |
||
வேண்டு அமர் நடையர், மென்மெல வருக! |
||
தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு |
||
5 |
ஏமதி, வலவ, தேரே! உதுக் காண்- |
|
உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்ன |
||
அரிக் குரல் மிடற்ற அம் நுண் பல் பொறிக் |
||
காமரு தகைய கானவாரணம் |
||
பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில் |
||
10 |
புலரா ஈர் மணல் மலிரக் கெண்டி, |
|
நாள் இரை கவர மாட்டி, தன் |
||
பேடை நோக்கிய பெருந்தகு நிலையே! | உரை | |
வினை முற்றி மீள்வான்தேர்ப்பாகற்குச் சொல்லியது.-மருதன் இளநாகனார்
|
39. குறிஞ்சி |
சொல்லின் சொல் எதிர்கொள்ளாய், யாழ நின் |
||
திருமுகம் இறைஞ்சி நாணுதி கதுமென; |
||
காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ? |
||
கொடுங் கேழ் இரும் புறம் நடுங்கக் குத்திப் |
||
5 |
புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின் |
|
தலை மருப்பு ஏய்ப்ப, கடை மணி சிவந்த நின் |
||
கண்ணே கதவ? அல்ல; நண்ணார் |
||
அரண் தலை மதிலராகவும், முரசு கொண்டு, |
||
ஓம்பு அரண் கடந்த அடு போர்ச் செழியன் |
||
10 |
பெரும் பெயர்க் கூடல் அன்ன நின் |
|
கரும்புடைத் தோளும் உடையவால் அணங்கே. | உரை | |
இரண்டாம் கூட்டத்து எதிர்ச்சியில் தலைவன் சொல்லியது.-மருதன் இளநாகனார்
|
103. பாலை |
ஒன்று தெரிந்து உரைத்திசின்-நெஞ்சே! புன் கால் |
||
சிறியிலை வேம்பின் பெரிய கொன்று, |
||
கடாஅம் செருக்கிய கடுஞ் சின முன்பின் |
||
களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்து, |
||
5 |
பால் அவி தோல் முலை அகடு நிலம் சேர்த்திப் |
|
பசி அட முடங்கிய பைங் கட் செந்நாய் |
||
மாயா வேட்டம் போகிய கணவன் |
||
பொய்யா மரபின் பிணவு நினைந்து இரங்கும் |
||
விருந்தின் வெங் காட்டு வருந்துதும் யாமே; |
||
10 |
ஆள்வினைக்கு அகல்வாம் எனினும், |
|
மீள்வாம் எனினும், நீ துணிந்ததுவே. | உரை | |
பொருள்வயிற்பிரிந்த தலைவன் இடைச்சுரத்து ஆற்றாதாகிய நெஞ்சினைக்கழறியது.-மருதன் இள நாகனார்
|