முகப்பு |
பாதிரி |
52. பாலை |
மாக் கொடி அதிரற் பூவொடு பாதிரித் |
||
தூத் தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல் |
||
மணம் கமழ் நாற்றம் மரீஇ, யாம் இவள் |
||
சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி, |
||
5 |
வீங்கு உவர்க் கவவின் நீங்கல்செல்லேம்; |
|
நீயே, ஆள்வினை சிறப்ப எண்ணி, நாளும் |
||
பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையே; |
||
அன்பு இலை; வாழி, என் நெஞ்சே! வெம் போர் |
||
மழவர் பெரு மகன் மா வள் ஓரி |
||
10 |
கை வளம் இயைவது ஆயினும், |
|
ஐது ஏகு அம்ம, இயைந்து செய் பொருளே. | உரை | |
தலைமகன் செலவு அழுங்கியது.-பாலத்தனார்
|
118. பாலை |
அடைகரை மாஅத்து அலங்கு சினை பொலியத் |
||
தளிர் கவின் எய்திய தண் நறும் பொதும்பில், |
||
சேவலொடு கெழீஇய செங் கண் இருங் குயில் |
||
புகன்று எதிர் ஆலும் பூ மலி காலையும், |
||
5 |
'அகன்றோர்மன்ற நம் மறந்திசினோர்' என, |
|
இணர் உறுபு, உடைவதன்தலையும் புணர்வினை |
||
ஓவ மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய |
||
துகிலிகை அன்ன, துய்த் தலைப் பாதிரி |
||
வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி, |
||
10 |
புது மலர் தெருவுதொறு நுவலும் |
|
நொதுமலாட்டிக்கு நோம், என் நெஞ்சே! | உரை | |
பருவம் கண்டு ஆற்றாளாய தலைவி சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
337. பாலை |
உலகம் படைத்த காலை-தலைவ!- |
||
மறந்தனர்கொல்லோ சிறந்திசினோரே- |
||
முதிரா வேனில் எதிரிய அதிரல், |
||
பராரைப் பாதிரிக் குறு மயிர் மா மலர், |
||
5 |
நறு மோரோடமொடு, உடன் எறிந்து அடைச்சிய |
|
செப்பு இடந்தன்ன நாற்றம் தொக்கு உடன், |
||
அணி நிறம் கொண்ட மணி மருள் ஐம் பால் |
||
தாழ் நறுங் கதுப்பில் பையென முள்கும் |
||
அரும் பெறல் பெரும் பயம் கொள்ளாது, |
||
10 |
பிரிந்து உறை மரபின பொருள் படைத்தோரே. | உரை |
தோழி, தலைமகன் பொருள்வயிற் பிரிதலுற்றானது குறிப்பறிந்து விலக்கியது; தோழி உலகியல் கூறிப் பிரிவு உணர்த்தியதூஉம் ஆம்.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
|