முகப்பு |
பல்லி ஒலி கேட்டுச் சகுனம் பார்த்தல் |
98. குறிஞ்சி |
எய்ம் முள் அன்ன பரூஉ மயிர்எருத்தின் |
||
செய்ய்ம்ம் மேவல் சிறு கட் பன்றி |
||
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர், வீங்கு பொறி |
||
நூழை நுழையும் பொழுதில், தாழாது |
||
5 |
பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென, |
|
மெல்லமெல்லப் பிறக்கே பெயர்ந்து, தன் |
||
கல் அளைப் பள்ளி வதியும் நாடன்! |
||
எந்தை ஓம்பும் கடியுடை வியல் நகர்த் |
||
துஞ்சாக் காவலர் இகழ் பதம் நோக்கி, |
||
10 |
இரவின் வரூஉம் அதனினும் கொடிதே- |
|
வைகலும் பொருந்தல் ஒல்லாக் |
||
கண்ணொடு, வாரா என் நார் இல் நெஞ்சே! |
உரை | |
இரவுக்குறி வந்து ஒழுகும்தலைவனைத் தோழி வரைவு கடாயது.-உக்கிரப் பெருவழுதி
|
169. முல்லை |
'முன்னியது முடித்தனம் ஆயின், நன்னுதல்! |
||
வருவம்' என்னும் பருவரல் தீர, |
||
படும்கொல், வாழி, நெடுஞ் சுவர்ப் பல்லி- |
||
பரற் தலை போகிய சிரற் தலைக் கள்ளி |
||
5 |
மீமிசைக் கலித்த வீ நறு முல்லை |
|
ஆடு தலைத் துருவின் தோடு தலைப்பெயர்க்கும் |
||
வன் கை இடையன் எல்லிப் பரீஇ, |
||
வெண் போழ் தைஇய அலங்கல்அம் தொடலை |
||
மறுகுடன் கமழும் மாலை, |
||
10 |
சிறுகுடிப் பாக்கத்து எம் பெரு நகரானே. |
உரை |
வினை முற்றி மறுத்தராநின்றான் நெஞ்சிற்கு உரைத்தது.
|
246. பாலை |
இடூஉ ஊங்கண் இனிய படூஉம்; |
||
நெடுஞ் சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்; |
||
மனை மா நொச்சி மீமிசை மாச் சினை, |
||
வினை மாண் இருங் குயில் பயிற்றலும் பயிற்றும்; |
||
5 |
உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்தி, |
|
செய்பொருட்கு அகன்றனராயினும் பொய்யலர், |
||
வருவர் வாழி-தோழி!-புறவின் |
||
பொன் வீக் கொன்றையொடு பிடவுத் தளை அவிழ, |
||
இன் இசை வானம் இரங்கும்; அவர், |
||
10 |
'வருதும்' என்ற பருவமோ இதுவே? |
உரை |
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறீஇயது.-காப்பியஞ் சேந்தனார்
|
333. பாலை |
மழை தொழில் உலந்து, மா விசும்பு உகந்தென, |
||
கழை கவின் அழிந்த கல் அதர்ச் சிறு நெறிப் |
||
பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின், |
||
பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும் |
||
5 |
சுரன் இறந்து, அரிய என்னார், உரன் அழிந்து, |
|
உள் மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி, |
||
அரும் பொருட்கு அகன்ற காதலர் முயக்கு எதிர்ந்து, |
||
திருந்திழைப் பணைத் தோள் பெறுநர் போலும்; |
||
நீங்குகமாதோ நின் அவலம்-ஓங்குமிசை, |
||
10 |
உயர் புகழ் நல் இல் ஒண் சுவர்ப் பொருந்தி |
|
நயவரு குரல பல்லி, |
||
நள்ளென் யாமத்து, உள்ளுதொறும் படுமே. |
உரை | |
பொருள்வயிற் பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தது.-கள்ளிக் குடிப் பூதம் புல்லனார்
|