முகப்பு |
மிளைப் பெருங்கந்தன் |
136. குறிஞ்சி |
'காமம் காமம்' என்ப; காமம் |
||
அணங்கும் பிணியும் அன்றே; நுணங்கிக் |
||
கடுத்தலும் தணிதலும் இன்றே; யானை |
||
குளகு மென்று ஆள் மதம் போலப் |
||
பாணியும் உடைத்து, அது காணுநர்ப் பெறினே. |
உரை | |
தலைமகன் பாங்கற்கு உரைத்தது. - மிளைப்பெருங் கந்தன் |
204. குறிஞ்சி |
'காமம் காமம்' என்ப; காமம் |
||
அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின், |
||
முதைச் சுவற் கலித்த முற்றா இளம் புல் |
||
மூதா தைவந்தாங்கு, |
||
விருந்தே காமம்-பெரும்தோளோயே! |
உரை | |
தலைமகற்குப் பாங்கன் உரைத்தது. - மிளைப் பெருங் கந்தன் |
234. முல்லை |
சுடர் செல் வானம் சேப்ப, படர் கூர்ந்து, |
||
எல்லுறு பொழுதின் முல்லை மலரும் |
||
மாலை என்மனார், மயங்கியோரே: |
||
குடுமிக் கோழி நெடு நகர் இயம்பும் |
||
பெரும் புலர் விடியலும் மாலை; |
||
பகலும் மாலை-துணை இலோர்க்கே. |
உரை | |
பருவ வரவின்கண் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - மிளைப்பெருங் கந்தன் |