2. உயிரில்லாதது;- ஐந்து வகைப்படும். அவை-புத்கலம்,
தர்மம், அதர்மம், ஆகாசம், காலம் என்பன. அவைவருமாறு;-(1) புத்கலம்;-வெண்மை,
செம்மை, கருமை, பொன்மை (மஞ்சள்), பசுமை என்னும் ஐவகை நிறத்தையும்; நறுநாற்றம்,
தீநாற்றம் என்னும் இருவகைக் கந்தத்தையும்; இனிப்பு, கைப்பு (கசப்பு), புளிப்பு, துவர்ப்பு,
கார்ப்பு என்னும் ஐவகைச் சுவையையும்; நொய்மை, திண்மை, தண்மை, வெம்மை, பருமை,
நுண்மை, மென்மை, வன்மை என்னும் எண்வகை ஊற்றையும் (ஸ்பரிசத்தையும்); வடிவு, எடை
ஒலிமுதலிய குணங்களையும் உடையது. (2) தர்மம்;- உயிரும், புத்கலமும் இயங்குவதற்குக்
காரணமான குணங்களையுடையது, (3) அதர்மம்;-உயிரும், புத்கலமும் நிலைபேற்றுக்கு (நிற்றலுக்கு)க்
காரணமான குணங்களை யுடையது.(4) ஆகாயம்;-பொருள் இருத்தற்கு இடந்தருங் குணமுடையது. (5)
காலம்;- பொருள்கட்கு இறப்பு, எதிர்வு, நிகழ்வு என்ற தன்மைகளை அடைவிக்குங்குணம்
உடையது.
3. ஊற்று;- வினைகள், உயிருடன்
சேரவரும் வாயில்.
4. செறிப்பு;- வினைகள், உயிருடன் சேரவரும் வாயிலைக்
தடுப்பது.
5. உதிர்ப்பு;-உயிருடன் முன்னரே சேர்ந்து பிணித்துள்ள
வினைகளைச் சிறிதுசிறிதாக நீக்குவது (கழிப்பது).
6. கட்டு;- வினைகள் உயிருடன் சேர்ந்து பிணிப்பது.
7. வீடு;-காதி அகாதி என்னும் இருவினைகளினின்றும் உயி்ர் நீங்கி எய்தும் நிலையான கைவல்யம்.
இவ்வேழு தத்துவங்களையும் வடநூலார். ஜீவ, அஜீவ, ஆஸ்ரவ,
ஸ்ம்வர, நிர்ஜ்ஜரா, பந்த, மோக்ஷ(தத்த்வ)ம் என்பர். இதனை, ‘ஜீவாஜீவாஸ்ரவ பந்த
ஸம்வர நிர்ஜ்ஜரா மோக்ஷாஸ் தத்த்வம்‘ என்ற தத்த்வர்த்த சூத்திரத்தால் அறியலாகும்.
இந்தத் தத்துவங்கள் நற்காட்சி யெய்துதற்குச்
|