சாதகமாகும். ‘தத்த்வார்த்த ஸ்ரத்தானம்
சம்யக்தர்சனம££’(தத்த்-சூ,) என்பது காண்க.
இத்தகைய உண்மைத்தன்மைகளை உணரும் அறிவிலராதலின், ‘தத்துவங் கொண்ட கேள்வியுங்
கூரறிவுமிலாத் தொண்டர’ என்றார். துருத்தேவதை - துர்த்தேவதா
என்ற வடசொற்சிதைவு.
அரசன் மாரிதேவதையை வணங்குதல்
19. |
பாவ மூர்த்தி படிவ மிருந்தவத் |
|
தேவி
மாட மடைந்து செறிகழன் |
|
மாவ
லோன்வலங் கொண்டு வணங்கினன் |
|
தேவி
யெம்மிடர் சிந்துக வென்றரோ. |
(இ-ள்,)
கழல் செறி-வீரக்கழலை யணிந்த, மா வலோன் -மிக்கவலியோனாகிய மாரிதத்தன்,
பாவ மூர்த்தி-பாவமே உருவெடுத்தாற்போன்ற சண்டமாரிதேவியின், படிவம் இருந்த - சிலைவைத்திருந்த,
அ தேவிமாடம் அடைந்து - அவள்கோயிலை யடைந்து, வலம் கொண்டு-வலமாகச்சுற்றிவந்து,
தேவி-தேவியே, எம் இடர் சிந்துக-எம்முடைய இடர்களைக் களைவாயாக, என்று-என்றுவேண்டி,
வணங்கினன்-தொழுதான். (எ-று,)
பாவ
வடிவினளாகிய தேவியை மாரிதத்தன் வணங்கின னென்க.
‘அத்தேவி’என்பது,
அவள் என்னுஞ் சுட்டின் அளவில் நின்றது. ஈற்றிலுள்ளதேவி, அண்மைவிளி. மாவலோன்என்பதற்கு,
குதிரை அல்லது யானையைச் செலுத்துவதில் வல்லவன் எனினுமாம். கழல்-வீரர் காலில் அணியும்
ஒருவித ஆபரணம் சிந்துக, வியங்கோள், அரோ, அசை.
20. |
மன்ன னாணையின் மாமயில் வாரணம் |
|
துன்னு
சூகர மாடெரு மைத்தொகை |
|
இன்ன
சாதி விலங்கி லிரட்டைகள் |
|
பின்னி வந்து பிறங்கின கண்டனன். |
|