- 99 -

2. சுபோபயோகம்;- தூயவாஞ்சை, இறைவன் வணக்கம், ஜீவகாருண்யம் முதலிய தூய எண்ணங்களுடையதும், தர்மானுபந்திபுண்ணியம் உயிருடன்  சேர்வதற்கும் சுத்தோபயோகத்திற்  பொருந்தச்செய்வதற்கும் காரணமாகியது மாகும்.  இதனை, தர்மத்யானம் என்றும், வியவஹார ரத்தினத்ரயபாவனை யென்றும் கூறுவர்.

3. சுத்தோபயோகம்;- இறைவன்வணக்கம் முதலிய யாதோர் எண்ணமுமின்றி நல்வினை  தீவினை இரண்டையும் தகர்த்துக் கைவல்ய மெய்துதற்குக் காரணமான தன்னுடைய தூய உயிர் ஒன்றனையே  எண்ணுவதாகும். இதனைச் சுக்லத்யானம் என்றும், பாலனைய சிந்தை யென்றும், நிச்சய இரத்னத்ரய பாவனை யென்றும் கூறுவர்.

இறைவனை வணங்குவதும் நல்வினைகளுக்குக் காரணமாதலின், நல்வினை தீவினை இரண்டையும் தகர்ப்பவரான சுத்தோபயோகிகளுக்கு  இறைவன்வணக்கம்  வேண்டாவென்க.

இங்கு, சிறந்த தாகிய சுபோபயோகம்  சுத்தோபயோகத்திற்கு காரணமாயிருந்தும், புண்ணியத்தின் வருவாய்க்குங் காரணமாதலால, ‘சேதியின்  நெறியின்வேறு சிறந்தது சிந்தை செய்யாச் சாது‘ என்றார்.  இங்கு, ‘சிறந்தது‘ என்றது. சுபோபயோகத்தைக்  குறிக்கும்.  இவற்றின் விவரம் பஞ்சாஸ்திகாயம், 172-முதல் 179 வரை கூறுவதனால் அறியலாகும்.  பவ்வியர்களுக்குத் தீக்ஷைகொடுப்பது, ஆகமஉபதேசம் செய்வது,  முக்தியடையும் வழியில் நிகழ்வது என்ற மூன்று செயலுடையவர்  ஆசார்யர் என்றும்,  ஆகமஉபதேசம் செய்வது,  முக்தியடையும் வழியில் நிகழ்வது என்ற இரண்டு செயலுடையவர் ஆசார்யர் என்றும், ஆகமஉபதேசம் செய்வது,  முக்தியடையும் வழியில் நிகழ்வது என்ற இரண்டு செயலுடையவர் உபாத்தியாயர் என்றும், முக்தி யடையும் செயல் ஒன்றுமாத்திரம் உடையவர் சர்வசாது என்றும் கூறப்படுவர்.

மோக்ஷமார்க்கத்தைச் சாதிப்பதினால் சாது  என்று பெயராயிற்று.     (52)