- 101 -

இளைஞர் புன்முறுவல்  செய்தல்

58. கொலைக்களங் குறுகி நின்றுங் குலுங்கலர்  டம்மால்
  இலக்கண மமைந்த மெய்ய ரிருவரு மியைந்து நிற்ப
  நிலத்திறை மன்னன் வாழ்க நெடிதென வுரைமி னென்றார்.
  மலக்கிலா மனத்தர் தம்வாய் வறியதோர் முறுவல்  செய்தார்.

     (இ-ள்.) இலக்கணம் அமைந்த மெய்யர் இருவரும் (சாமுத்ரிகம் என்ற அங்க இலட்சண நூலுள்  கூறியவாறு) உடலின் இலக்ஷணம் அமைந்த இளைஞரிருவரும், கொலைக்களம் குறுகிநின்றும்-(மாரியின் பலிபீடத்தின் எதிரிலுள்ள) கொலைக்களத்தை அணுகி நின்றும், குணங்கள் தம்மால்-நற்காட்சி முதலிய நற்குணங்களை யுடையாமல், குலுங்கலர்-(உடலும் மனமும்) நடுங்காதவராய், இயைந்து நிற்ப-(மரணத்திற்கும்)  ஒருப்பட்டுநிற்க,  (அவ்வமயம் ஏனைமாந்தர் இளைஞரைநோக்கி), ‘நிலத்து இறை மன்னன் - உலகத்தலைவனான  இம்மன்னன், ‘நெடிதுவாழ்க என உரைமின் என்றார் - நீடூழிவாழ்வானாக என்று பல்லாண்டு கூறுமின'; என்றனர், மலக்குஇலா மனத்தர் - கலக்கம் இல்லாத நெஞ்சமுடைய இளைஞரிருவரும்,  தம்வாய்வறியது ஓர் முறுவல் செய்தார்-(தங்களின்  முற்பவ நிகழ்ச்சிகள் அனைத்தும் நினைவிற்கு வரத்) தம்  வாயினின்றும் சிறியதொரு புன்முறுவல் புரிந்தனர். (எ-று.)

கொலைக்களம் குறுகியும்  மரணத்திற்கு அஞ்சாது நிற்கும் இளைஞரை  ஏனைமாந்தர் நோக்கி   அரசனுக்குப் பல்லாண்டு  கூறுக என,  இளைஞர்  புன்னகை  புரிந்தனரென்க.

கொலைக்களம் குறுசியும் அஞ்சாமல்  நிற்கும் திண்மை குணத்தின்பாற் பட்டதாகலின்,  ‘குலுங்கலர்  குணங்கடம்மால';  என்றார்.  நற்காட்சியுடன் நல்லறிவும்  நல்லொழுக்கமும் உடையராதலின், ‘குணங்கள் எனப் பன்மையாகக்