- 104 -

   மன்னவன்  மனமாற்ற மடைதல்

60. நின்றவர் தம்மை நோக்கி நிலைதளர்ந் திட்டு மன்னன்(கொல்
  மின்றிகழ் மேனி யார்கொல் விஞ்சையர்  விண்ணுளார்
  அன்றியில் வுருவம் மண்மே லவர்களுக் கரிய தென்றால்
  நின்றவர் நிலைமை தானு நினைவினுக் கரிய தென்றான்

(இ-ள்.) மன்னன் - மாரிதத்தவரசன்,   நின்றவர் தம்மை-(அஞ்சாது) நின்ற இளைஞரிவரையும்,  நோக்கி-(கூர்ந்து) நோக்கி, நிலைதளர்ந்திட்டு - மனநிலை  (யும்வாளோங்கிய கையும்)  தளர்ச்சியடைந்து, இவ்வுருவம்-இத்தகையவடிவம், மண்மேலவர்களுக்கு - பூமியில்  வாழும் மாந்தர்களுக்கு, அரியது என்றால் - கிடைத்ததற்கருமையனதாயின்,  மின்திகழ் மேனியார் - மின்போ லொளிவரும் மேனியையுடைய இவர்கள் (நம்மைச் சோதிக்கவந்த), விஞ்சையர் கொல் - வித்யாதரர்களோ?, விண்ணுளார்கொல் - விண்ணுலகில் வாழும் தேவர்தாமோ?, அன்றி-அதுவே யல்லாமல்,  நின்றவர்  நிலைமைதான்உம் - இங்கேநிற்கின்ற இவர்தம் மனநிலைமையும், நினைவினுக்கு அரியது - நம்மால் நினைத்தற்கும் அரிதாயுளது,  என்றான் - என்றுகூறினான். (எ-று.)

மன்னன் இளைஞரின் முகமலர்ச்சியும்  அகமலர்ச்சியும் கண்டு  மனந்தளர்ந்து  விஞ்சையரோ  தேவரோ என் றையுற்று  இவரது மனநிலைமை  அறியவியலாததாயுளது என்று  கூறினானென்க.

தேவர்களுக்  கன்றி இத்தகைய உருவம் மானிடர்க்கு அமையாது என்ற எண்ணத்தாலும்  இளம்பருவத்தில் தவவேடம்  பூண்டிருப்பதனாலும் மரணத்தறுவாயிலும் அஞ்சாது நின்று நீதி புகலுவதனாலும்  மன்னன்மனம் தளர்ந்து ஐயுறுமாறாயிற்று.  கொல், ஐயப்பொருளது ‘ நினைவினுக்கு  அரியது‘ என்ற இடத்து, ‘அருமை‘  இன்மை