குறித்து
நின்றது, ‘தீண்டா விடுதலரிது‘ (நாலடி. 109) என்புழிப்போல. (56)
அச்சமின்மை,
நகைத்தல் ஆகிய இவற்றின் காரணம் வினாவிய
வேந்தனுக்கு
இளைஞர் விடையிறுத்தல்
61. |
இடுக்கண்வந் துறவு மெண்ணா தெரிசுடர் விளக்கி
னென் [கொல் |
|
நடுக்கமொன் றின்றி நம்பா னகுபொருள் கூறு கென்ன |
|
அடுக்குவ தடுக்கு
மானா லஞ்சுதல் பயனின் றென்றே |
|
நடுக்கம
தின்றி நின்றாம் நல்லறத் தெளிவு சென்றாம். |
(இ-ள்.) இடுக்கண் வந்து உறவும் - (உங்கள் உயிருக்கே)
இறுதி வரவும், எண்ணாது (அதனை ஒருபொருட்டாகக்) கருதாது, எரிசுடர் விளக்கின் - எரிகின்ற விளக்கின் சிகை நடுங்குவது போல,
நடுக்கம் ஒன்று இன்றி - நடுக்கம் சிறிது மின்றி, நம்பால் - நம்மிடத்தில், நகுபொருள் என் கொல் - நீவிர் சிரித்தக்காரணம்
என்னை? கூறுக-இயம்புக, என்ன - என்று (அரசன்) கேட்க, அடுக்குவது அடுக்கும்ஆனால் - ஒன்றன்மேலொன்றாகப் பிணித்துள்ள
பழவினை (பயனீயுங்கால் உதயமாகி) வெளிவருமாயின்,அஞ்சுதல் பயன் இன்று என்று- (அதற்கு) அஞ்சுவதனால் உண்டாகும் பயன்
சிறிதும் இல்லை என்று கருதி, நடுக்கம் அது இன்றி நின்றாம் - நடுக்கம் என்பது சிறிதும் இலரானோம், நல் அறத் தெளிவு
சென்றாம் - திருவறத்தைத் தெளிதலாகிய நற்காட்சியை அடைந்துளோம். (எ-று.) இடுக்கணை நினையாது சிரித்தது யாது காரணம்
என்று வினவிய அரசனுக்கு, யாம் நற்காட்சி யுடையேமாதலின் அச்சமிலரானோம் என்றன ரென்க.
சுடர்-சிகைவு; விளக்கின் கொழுந்து, விளக்கு
எரியும் போது சிகை காற்றிலசைவது போல நடுங்கும் நடுக்கம்.
|