- 106 - |
‘ |
இடுக்கண்வந் துற்றகாலை யெரிகின்ற
விளக்குப் போல |
|
நடுக்க மொன் றானுமின்றி நகுகதா
நக்க போழ்தவ் |
|
விடுக்கனை
யரியு மெஃகா மிருந்தழு தியாவ ருய்ந்தார் |
|
வடுப்படுத்
தென்னை யாண்மை வருபவந் துறுங்க ளன்றே‘ |
|
(சீவக.
509.)
|
என்ற செய்யுளும், ‘எரிகின்ற விளக்குப் போல,
நடுங்கும் நடுக்கம்‘ என்னும் அதன் உரையும் காண்க. |
‘இடுக்கண் வருங்கால் நகுக‘ என்றார் தேவரும்.
அடுக்குவது அடுக்கும் என்பதனை.
|
‘அஞ்சின மெனினும் மெய்யே அடைப’ வந்தடையும் என்றார் (யசோ. 30.)
இக்காப்பியத்திலும். தெளிவு - நற் காட்சி (சம்யக் தரிசனம்)
|
‘தெள்ளிதி னப்பொரு டெளிதல்
காட்சியாம்’
(சீவக. 2845) |
என்றும்,
‘பொய்வகை யின்றித் தேறல் காட்சி’ (சீவக. 1436.)
என்றும், கூறுவதனால் அறியலாகும்.
“ |
யாது மூரே யாவருங் கேளிர் |
|
தீது நன்றும் பிறர் தர வாரர் |
|
நோதலுந்
தணிதலு மவற்றோ ரன்ன |
|
சாதலும் புதுவ தன்றே வாழ்த |
|
லினிதென
மகிழந்தன்று மிலமே முனிவி |
|
னின்னா தென்றலு மிலமே... பேர்
யாற்று |
|
நீர்வழிப்
படூஉம் புணைபோ லாருயிர் |
|
முறைவழிப் படூஉ மென்பது திறவோர் |
|
காட்சியிற்
றெளிந்தனம்” (புறம். 192) |
என்று கூறுவதனாலும் அறியத்தகும். இதுவும் முன்
வருஞ் செய்யுளும் ஒருதொடர். நகுதற்குக் காரணம் வரும்பாட்டில் கூறுகின்றார்.
(57)
|