இதுவுமது
62. |
முன்னுயி ருருவிற் கேத முயன்றுசெய் பாவந் தன்னா |
|
லின்னபல் பிறவி தோறு மிடும்பைக் டொடர்ந்து
வந்தோம் |
|
மன்னுயிர்க்
கொலையி னாலிம் மன்னன்வாழ் கென்னு |
|
[மாற்றம் |
|
என்னதாய்
விளையு மென்றே நக்கன மெம்மு ளென்றான். |
(இ-ள்.)
முன் -இதற்குமுன் (கடந்த பிறவி யொன்றில்), உயிர் உருவிற்கு - உயிருள்ள கோழியைப்போல மாவினாற் செய்த உருவிற்கு,
ஏதம் முயன்று செய்பாவம் -தீங்கு செய்ய முயன்று பலியிட்ட பாவத்தால், இன்ன - (இதோ இங்கு நிறைந்துள்ள மயில்
முதலிய) இவைகளைப் போன்ற, பல் பிறவி தோறும் - பலப்பிறப்புக்களிலும் பிறந்து, இடும்பைகள் தொடர்ந்து - (தீவினையால்)
துன்பங்கள் தொடரத் துன்புற்று, வந்தோம்-(பின் திருவறப்பெருமையால் இம்மானிடராய்ப்) பிறந்து வந்தோம்,(மாவினாற் செய்த கோழியைப் பலியிட்ட பழவினையே பல்வேறுவிதப்
பிறவிகளிற் பிறந்துழலச் செய்ததெனின்), மன்னுயிர்க் கொலையினால் - எண்ணற்ற உயிர்களைப் பலியிடுவதனால், இம் மன்னன்
- இவ் வேந்தன், வாழ்க என்னும் மாற்றம் - வாழ்வானாக என்று கூறுஞ்சொல், என்னது ஆய் விளையும் என்றே - எத்தகைய தீங்கை
விளைவிக்குமோ என்று நினைத்தே, எம்முள் நக்கனம் - எங்களுக்குள் சிரித்தனம், என்றான் - என்று அபயருசி கூறினான்.
(எ-று.)
மாக்கோழியின் பலியே பலபிறவித் துன்பத்திற்குக்
காரணமாயிற்று; ஆகலின், பஞ்சமாபாதகங்களு ளொன்றாகிய உயிர்க் கொலை புரியும் மன்னன், அத்தீவினைகளால் பலபிறவிக ளடைந்த அல்ல லுழத்தல்
திண்ணம், அங்ஙன
|