- 131 -

போகத்தையும், எய்தினாம்-அடைந்துளோம் (ஆதலின்),முந்தையின் மும்மடி-முற்பிறப்பிற்  செய்ததைக் காட்டிலும் மூன்று மடங்கு (மிகுதியாக), புண்ணியம் முயன்று- நல்வினைகளை முயற்சியுடன் பெற்று, இந்திர உலகமும்-அகமிந்திர உலகத்தையும், எய்தற்  பாலது - அடையும் முறைமை யுடையது.     (எ-று.)

நாம் செய்த நல்வினைகளினாலேயே நமக்குப் போகப்பொருள் முதலியன கிடைத்துள்ளன;  ஆகலின்,  மீண்டும் அந்நல்வினைகளைப் பெறமுயன்று  தேவாதி சுகத்தையும் பெறவேண்டு் மென்று  அசோகன் எண்ணினானென்க.

ஒருவன், இப்பிறப்பில் அடைந்தனுபவிக்கும் இன்பதுன்பங்களைக் கொண்டே  முற்பிறப்பிற் செய்த  நல்வினைகளையும்;  இப்பிறப்பில் உள்ள எண்ணம் செயல் முதலியவற்றைக் கொண்டு மறுபிறவியின் இன்பதுன்பங்களையும், ஒருவாறு பகுத்தறிய முடியும்.  ஆதலின்,  ‘முந்து...எய்தினாம்‘  என்று  இவ்வசோகனும் எண்ணினானென்றுணர்க.  முந்து-முற்பிறவி, நல்வினை வருவதற்கு ஏதுவாய செயல் முதலியவற்றை, முந்துசெய்’தது என்றார்.  நல்வினை உத்தம மானிடனாகப் பிறத்தற்குக் காரணமான  நாமகருமம், பூர்ண ஆயுள் பெறுவதற்குக் காரணமான  ஆயுஷ்யகருமம் முதலியனவாகும். முளைத்தல்-உதயமாதல்; பயனளிக்குங்

காலத்து பலனைத்தரல்.  ‘அருவினை விளையுளாய பிறவி‘  என்றார் (யசோ.46ல்.) முன்னரும். இத்தலை-இப்பிறவி நல்வினை செய்தார் நினைத்த பொருள்பெறுவதனை, ‘சிந்தை செய்பொருள்‘  என்றார்.    

“அறவிய மனத்த ராகி யாருயிர்க் கருளைச் செய்யிற்
பறவையு நிழலும் போல பழவினை யுயிரோ டாடி
மறவியொன் றானு மின்றி மன்த்ததே சுரக்கும்  பால
கறவையிற் கறக்குந் தம்மாற் காமுறப் பட்ட தெல்லாம்.”

என்று (சீவக.2877 ல்) கூறியது ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது.  ஒடு-உயிர்பின் மேற்று; இனி, “நாவீற்றிருந்த புலமா மகளோடு நன்பொற், பூ வீற்றிருந்த புலமா