மகன் புல்ல நாளும்” என்று (சீவக. 30 ல்) வருவதற்கேற்ப ‘சிந்தை
செய் பொருளோடு‘ என்பதற்கு கல்விப்பொருளோடு எனினுமாம். மும்மை-மூன்று பங்கு ; ஈண்டு
மிகுதி குறித்து நின்றது. தீவினைகளைப் போலல்லாது
நல்வினைகளை முயன்றே பெறவேண்டு மாதலின், ’முயன்று‘என்றார்.
அகமிந்திர வுலகத்துள்ள இந்திரர்களாகப் பிறந்தார் இரண்டு மூன்று பிறவிகளில் முக்தி
யெய்து வராகலின், ‘இந்திர வுலகமும் எய்தற் பாலது‘ என்றார். உலகமும் என்றதிலுள்ள
உம்மை சிறப்பும்மை, (முக்தியெனினுமாம்) ஏகாரம் தேற்றம்.
(9)
யசோதரனுக்கு
முடி சூட்டுதல்
82. |
இனையன நினைவுறீஇ
யசோதர னெனுந் |
|
தனையனை நிலமகட்
டலைவ னாகெனக |
|
கனை1
மணி வனைமுடி கவித்துக் காவலன |
|
புனைவளை மதிமதி
புலம்பப் போயினான். |
(இ-ள்.)
காவலன் - அசோக மன்னன், இனையவன நினைவுறீஇ-மேற்கூறிய நிலையாமை முதலியவற்றை நினைக்கலுற்று,
யசோதரன் எனும் தனையனை-யசோதரன் என்றதன்புதல்வனை, நிலமகள் தலைவன் ஆக என. (என்னைப்
போலவே சிறிது காலம்) இப்பூமி (தேவி)க்கு நாயகனாகஎன்று (அதற்குரிய நீதிகளையும்
போதித்து) கனைமணி வனைமுடி கவித்து-நெருங்கிய மணிகளாலலங்கரிக்கப்பட்ட முடியைச்
சூட்டி, புனைவளைமதிமதி-அழகுபெறஅணிந்த வளையலையுடைய சந்திரமதி, புலம்ப - தனித்து
வருந்த, போயினான்-(அவளைத்) துறந்து சென்றான். (எ-று.)
அசோகன் வைராக்ய முற்றுத் தனையனுக்குப்
பட்டமளித்துத் துறந்து சென்றன னென்க.
துறவெண்ணம் வருங்கால் அநித்தியம்
முதலாகக்கூறும் பன்னிரண்டுவித சிந்தை (த்வாதசானுப்ரேக்ஷை)
|