போலித் துறவு அன்மையின், ‘மெய்க் குணதரன்‘ என்றார்.
அரசன் ஒருவன் துறந்தான் என்னின் அத்துறவைக் கண்ட ஏனைய அரசரும் துறவுமேற் கொள்ளுதல்
இயல்பாதலின், அசோகன் துறவைக்கண்டு அரசர்நூற்றுவர் துறந்தனர் என்க. ஐம்பதின்
இரட்டி நூறு இதனை,
“ |
விரக்திபாஜாம்ந்து
தேன ராஜ்ஞாம் |
|
தபோவனம்
பூமிபதிர் ஜகாம” என்று (யசோ. 2;16) |
வாதிராஜர் கூறியதாலு முணரலாம். தவத்துருவு-திகம்பர வடிவு; (யதா
ஜாதருபம்) அரசர்க்குரிய ஆடை அணிகலன் முதலியவற்றை நீக்கி, திக்கை ஆடையாக உடையனாதல்.
இதனை யத்யாசாரம் என்னும் நூலில் பரக்கக் கூறுவதனாலறிக. வரை-மூங்கில் எனினுமாம்.அரோ,
அசை.
(11)
யசோதரன் அரசியல்
84. |
எரிமணி யிமைக்கும்
பூணா னிசோதர னிருநி லத்துக் |
|
கொருமணி திலதம்
போலு முஞ்சயி னிக்கு நாதன்
|
|
அருமணி முடிகொள்
சென்னி யரசடிப் படுத்து யர்ந்த
|
|
குருமணி குடையி
னீழற் குவலயங் காவல் கொண்டான்.
|
(இ-ள்.)
எரிமணி-ஒளியுள்ள இரத்தினங்கள், இமைக்கும்-இடைவிட்டொளிருகின்ற, பூணான்-ஆபரண மணிந்தவனும்;
இருநிலத்துக்கு-பெரிய இஞ்ஞாலத்திற்கு, ஒருமணி திலதம் போலும்-ஒப்பற்றதொரு அழகிய
திலதம் போன்ற - உஞ்சயினிக்கு உஜ்ஜயினிமா நகரத்திற்கு, நாதன்-தலைவனும் (ஆகிய),
இசோதரன்-யசோதரனென்பான், அருமணி முடிகொள் சென்னி அரசு-சிறந்த மணிகள் பதிக்கப்பட்ட
முடியணிந்த சிரசுடைய அரசர்களை, அடிப்படுத்தி-(தனக்குக்) கீழ்படியச் செய்து, உயர்ந்த-சிறந்த,
குருமணிக் குடையின் நீழல்-நிறமமைந்த மணிகள் பதிக்கக்பெற்ற வெண்கொற்றக் குடையின்
நீழலின் கண்(இருந்து), குவலயம் காவல் கொண்டான்-உலகங்காத்தலாகிய தொழிலை மேற்கொண்டான்.
(எ-று.)
|