கடலைக்கடப்பதற்குக் காரணமானது தெப்பம்; இவ்விடத்து
அமிர்தமதியாகிய தெப்பம் காமக் கடலைக் கடப்பதற்கு உரியதாகின்றது. மடம் - பெண்கள்
நாற்குணத்தொன்றெனினுமாம். நல்லாள் - நலனுடையாள். ‘இடங்கழிந்து‘ -வரம்புநீக்கி,
எல்லையின்றி; ‘ இடங்கழிகாமமொடடங்கா னாகி‘ என்பது ‘மணிமேகலை‘ 18-11-9ல் கூறுதல் காண்க. பஞ்சேந்திரிய
விஷயங்களை அனுபவித்துக் கழித்து எனினும் அமையும்.
(19)
இருவரும்
இன்பம் நுகர்ந்தபின் கண் உறங்கல்.
92. |
இன்னரிச்
சிலம்புந் தேனு மெழில்வளை நிரையு மார்ப்ப |
|
பொன்னவிர்
தாரோ டாரம் புணர்முலை பொருகு பொங்க் |
|
மன்னனு மடந்தை
தானு மதனகோ பத்தின் மாறாய்த்றே |
|
தொன்னலந்
தொலைய வுண்டார் துயில்கொண்ட விழிகளன் |
(இ-ள்.)
இன் அரி சிலம்பும் - இனிய ஒசையைத்தருகின்ற பரல்நிறைந்த சிலம்பும், தேனும் - (மாலைகளில்மொய்த்துள்ள)
வண்டுக் கூட்டமும், எழில்வளை நிரையும் - அழகிய வளையல் வரிசையும், ஆர்ப்ப - ஒலிக்கும்
படியாக பொன் அவிர் தாரோடு - பொன்னா லியற்றப்பட்டு ஒளிரு கின்ற - மாலையோடு,
ஆரம் - இரத்தினாஹாரமும், புணர்முலை பொருது பொங்க - (அமிர்தமதியின்) இரண்டு
தனங்களிலும் அழுந்தி எழும்படியாக, மன்னன் உம்மடத்தை தான் உம் - அரசனும் அரசியும்.
(ஆகிய இருவரும்), மதன கோபத்தின் மாறுஆய் - மன்மதனின் கோபத்திற்கு மாறுபட்டு,
தொல்நலம் தொலைய - கலவிக்கு முன்பு இருந்த (தங்கள்) அழகு கெட, உண்டார் - இன்புற்றனர்,
விழிகள் அன்றே துயில் கொண்ட - அவர்தம் விழிகளும் அப்போழுதே துயின்றன.
(எ-று.)
சிலம்பு முதலியன ஆர்ப்ப
ஆரமும் மாலையும் பொங்ககாமச் சுவையை உண்டு, அரசனும் அரசியும் துயின்றன ரென்க. தொல்நலந்தொலைந்தது
காமன் கோபம் மாறுபடுதற்குச் காரணமாகும். (20)
|