- 161 -

(இ-ள்.) கடையன் -கீழ்மகனான அட்டபங்கன்,தாழ்த்த பொருள் இரு புகல்க என்று -நீ காலந் தாழ்த்துவந்த காரணத்தைக் கூறுக என்று வினவி,  அக்கமலப்பாவை- அம் மலர்மிசைமங்கையனைய அமிர்தமதியின், கருங் குழல் - கரிய கூந்தலை, கையால் பற்றி - கைகளாற்பிடித்து, இடைநிலம் (நிலத்திடை) செல்ல-(அவள்உடல்) தரையிற் படும்படியாக, ஈர்த்திட்டு - இழுத்து, இரு கையினாலும் - இரண்டு கைகளாலும், ஒச்சி-ஓங்கி, பலபுடை புடைத்து - பல அடி அடித்து, துடிஇடை துவள -உடுக்கை போன்ற இடை அசைய, நிலத்திடை வீழ்ந்து -பூமியில் தள்ளி, துகைத்திட்டான்-மிதித்தான்.  (எ-று.)

பாகன் ‘காலந் தாழ்த்துவந்த காரணங் கூறுக‘ என்று பாவையின் கூந்தலைப் பற்றி இழுத்துப் புடைத்து மிதித்தா னென்க.

அமிர்தமதி வருவதற்குள் பாகன் நித்திரை அடைந்து விட்டதனால் காலந் தாழ்த்து வந்ததற்குச் சினந்து துன்புறுத்தினான்.  இதனை, “நித்திரை அடைந்துள்ள  பாகனது கால்பெருவிரலைத் தொட்டு எழுப்பினதனால் நித்திரையினின்று எழுந்து(கோபித்தான்)”  என்னும் பொருள்பட, “சரணாங்குஷ்டமாக்ருஷ்ய க்ருதநிதரோ விநித்ரித;” என்று பூர்ணதேவரியற்றிய யசோதர சரிதத்துள் (143) வந்திருத்தலால் அறியலாகும்.              (41)

அரசி மூர்ச்சை யெய்துதல்

114. இருளினா லடர்க்கப் பட்ட வெழின்மதிக் கடவுள் போல்
  வெருளியான் மதிப்புண் டையோ விம்மிய மிடற்ற ளாகித்
  தெருள்கலா ளுரையு மாடாள் சிறிதுபோ தசையக் கண்டே
  மருளிதான் மயங்கி மாதர் மலரடி சென்னி வைத்தான்.

(இ-ள்.) இருளினால் - இருள்தொகுதியா (னஇராகு விமானத்தா)ல்,  அடர்க்கப்பட்ட -தாக்கப்பட்ட, எழில் மதிக் கடவுள்போல-அழகிய பௌர்ணமி சந்திரன் போல (அரசி),  ஐயோ - அந்தோ,  மிதிப்புண்டு - மிதிக்கப்