- 163 -

(இ-ள்.) தையலாள்-தையலாகிய அமிர்தமதி, மெல்லத் தேறி - மெதுவாகத் தெளிந்து,  சாரனை - சோரநாயகனை மகிழ்ந்து நோக்கி-மகிழ்ச்சியோடு பார்த்து,  வெய்ய நீ முனிவு செல்லல்-விருப்பமுள்ள நீ கோபஞ் செய்யாதே; மேதினிக்கு  இறைவன்தன்னோடு-பூமிக்கு  அரசனாகிய யசோதரனோடு, ஐய ஆசனத்தின் உம்பர்-அழகிய (அர்த்த) ஆசனத்தின்மீது, அரச அவை இருந்து-அரசசபையில் வீற்றிருந்ததனால்,  வெய்யபாவங்கள் செய்தேன் - கொடிய பாபம் செய்தவளாயினேன்; விளைந்தது - நிகழ்ந்ததை, விளம்பலன் - முன்னரே சொல்லிற்றிலேன், என்றாள் - என்று சொன்னாள்.  (எ-று.)

தையல், பாகனை நோக்கி, ‘கோபியாதே‘ என்று கூறி, காலந்தாழ்த்ததன் காரணம் கூறினா ளென்க.

  சாரன்-ஜாரன்;  வடசொல்.  ஜாரன்-சோர நாயகன். ‘மேதினிக்கிறைவன்‘  எனவே, தனக்கு இறைவனாகக் கருதாமை வெளியாயிற்றென்னலாம். பாகனோடு கூட வேண்டிய காலத்து  கூடாததையும் அரசனோடு  அமர்ந்திருந்ததையும் தொகுத்து ‘வெய்ய பாவங்கள் செய்தேன்‘ என்றாள்.  கண்டாய், முன்னிலை அசை.                                            (43)

அரசியின் உறுதிமொழி

116. பொற்பகங் கழுமி யாவும் புரந்தினி  தரந்தை தீர்க்குங்
  கற்பகங் கரந்து கண்டார் கையகன் றிடுத லுண்டோ
  எற்பகங் கொண்ட காத லெனக்கினி நின்னின் வேறோர்
  சொற்பகர்ந் தருளு காளை1 துணைவரா பவரு முண்டோ.

(இ-ள்.) காளை-இளையோய்,  அகம் - தன்னிடத்தே, பொற்பு கழுமி-அழகு நிரம்பப்பெற்று,  யாவும்-(தன்னை அடைந்த உயிர்கள்) எல்லாவற்றையும்,  இனிது புரந்து-இனிமை பெறக் காப்பாற்றி, அரந்தை  தீர்க்கும்-அவற்றின் துன்பத்தைத் தீர்க்கின்ற,  கற்பகம்-கற்பகத்

1 துணைவருபவரு