- 164 -

தருவை, காந்து கண்டார்-(ஒருவருக்கும் தெரியாமல்) மறைந்து சென்றுகண்டவர்கள், கையகன்றிடுதல் உண்டோ - அதனை விட்டுவிடுவதும் உண்டோ? (இல்லை, அதுபோல), இனி-இப்போது, எற்பு அகம் கொண்ட - எலும்பினிடத்தும் ஊடுருவிச்சென்றுள்ள,  காதல் - காதலுடைய, எனக்கு--, நின்னின் - உன்னைவிட, வேறோர் துணைவர் - மற்றொரு துணைவராக, ஆபவரும்   உண்டோ-ஆகுபவரும் இருக்கின்றனரோ?  சொல் பகர்ந்து அருள்-(இதுபற்றிய) ஒரு சொல்லைக் கூறுவாயாக. (எ-று.)

காதல்  நிறைந்த யான் உன்னை விட்டிடேன்;  எனக்கு உன்னைப்போன்ற துணை வேறொருவரில்லை யென்றாளென்க.      (44)

  மறைந்து நின்ற மன்னனின் செயல்

117. என்றலு மேனை மன்ன னெரியெழ விழித்துச் சீறிக்
  கொன்றிவர் தம்மை வாள்வாய்க் கூற்றுண விடுவ லென்றே
  யொன்றின னுணர்ந்த துள்ளத் துணர்ந்தது கரத்து வாளும்
  சென்றிடை விலக்கி நின்றோர் தெளிந்துணர் வெழுந்ததன்றே

(இ-ள்.) என்றலும் - என்று (தன்தேவி) கூறியதும், ஏனை மன்னன்-இவர்களின்   வேறாய் மறைந்திருந்த மன்னவன்,  எரிஎழ  விழித்து-(கண்களில்,   தீப்பொறி பறக்க விழித்து,   சீறி-கோபித்து,  இவர்தம்மை- இவ்விருவரையும், வாள்வாய் கொன்று -வாளால் வெட்டி வீழ்த்தி, கூற்று உண இடுவல் என்று-காலனுக்கு  விருந்து இடுவேன் என்று ஒன்றினன் - ஒருப்பட்டான் ; உள்ளத்து

உணர்ந்தஅது - அவன் உள்ளத்தில் உணர்ந்த  அதனை, கரத்துவாளும் -  அவன்கையில் இருந்தவாளும்,  உணர்ந்தது-உணர்ந்துகொண்டது, அன்றே -அப்பொழுதே, ஓர் தெளிந்த உணர்வு - ஒரு தெளிவுபெற்ற உணர்ச்சி, இடைசென்று-(ஒன்றிநின்ற காத்திற்கும் மனத்திற்கும்) இடையே சென்று, விலக்கி நின்று -அச்செயலைத் தடுத்து நின்று,  எழுந்தது-ஓங்கிற்று.  (எ-று.)