(இ-ள்.) கனம் வரை அனைய மார்பன்
- மேகந்தங்கியிமலைபோன்ற மார்பினையுடைய அரசன், இனையன பலவும்-இவை போன்ற பலவற்றையும்,
சிந்தித்து - நினைத்தவனாகி, இழிப்பொடு-(அவ்விருவரையும் ) தாழ்வாக, பழித்து -
நிந்தித்து, புனைவளையவர்கள் போகம்-வளையலையணிந்துள்ள மகளிர் போகத்தை, நெஞ்சில்
புறக்கணித்திட்டு-(தன்) மனத்தால் உதறித் தள்ளிவிட்டு, மீண்டு-திரும்பிவந்து, கடி
கமழ் அமளி ஏறி - மணம்நாறும் மலரணியி லேறி,
தனி முனி களிறுபோல-தனித்துக்
கோபத்தோடு தங்கிய யானையைப் போல (மனத்திற் சினங்கொண்டு), தான்-தனக்குத்தானே,
நினைவு எய்துகின்றான்-(மேல் செய்யவேண்டுவனவற்றை) எண்ணுவானாயினான். (எ-று.)
மார்பன், மனைவியையும் பாகனையும் இழித்துப் பழித்துக்கூறி, போகத்தையும் வெறுத்து,
தன் அமளி யேறி ஆழ்ந்து சிந்தித்தான் என்க,
இனி தான் இனைவு எய்துகின்றான் என்று பிரித்துக் கூறலும் அமையும். இனைவு - வருத்தம்.
பழித்து என்றதற்கு ‘தன்னைப் பழித்து‘ எனலும் ஆம். இதனை, ‘தன்னை நிந்தித்தல்
தக்கோர்ப் பழிச்சுதல் தயாவோடொன்றி, யின் னுயிர்க் கருளையீதல்‘ (மேரு. 852)
என்ற வாமன் முனிவா கூற்றாலும் அறியலாகும். ‘கனை வரை யனைய மார்பன்‘ என்னும் பாடத்திற்கு,
செறிவுடையமலைபோன்ற மார்பனென்க. (47)
மன்னன்
காமத்தாலாகுந் தீங்குகளைக் கருதுதல்.
120. |
எண்ணம தலாமை
பண்ணு மிற்பிறப் பிடிய நூறும் |
|
மண்ணிய புகழை
மாய்க்கும் வரும்பழி வளர்க்கும் மானத் |
|
திண்மையையுடைக்கு
மாண்மை திருவொடுசிதைக்குஞ்சிந்தை |
|
கண்ணொடு கலக்கு
மற்றிக் கடைப்படுகாம மென்றான். |
(இ-ள்.) இக் கடைபடும் காமம்
- கடையானதாகச் (சான்றோர்களால்) இழித்துரைக்கப் படும் இக் காமம் எண்ணம்-எண்ணங்களை,
அலாமை பண்ணும், நல்லவை யல்லாதவைகளாக எண்ணச் செய்யும், இல்பிறப்பு - சிறந்த
|