- 167 -

குடிப்பிறப்பின் மேன்மையை,  இடிய நூறும்-கெடும்படி அழிக்கும்;  மண்ணிய புகழை-தூய்மையான கீர்த்தியை, மாய்க்கும் - அழிக்கும்; வரும்பழி - வருகின்ற  பழிச் சொற்களை,  வளர்க்கும் - மிகுதியாக்கும்;  மானத் திண்மையை; மானத்தின் வன்மையை, உடைக்கும்-கெடுக்கும்; ஆண்மை -ஆண்மைத்

தன்மையை, திருவொடு-செல்வத்தோடு, சிதைக்கும்-அழித்துவிடும், சிந்தை-மனத்தை, கண்ணொடு - கண்களோடு, கலக்கும் - கலங்கச் செய்யும்,என்றான்-என்று சிந்தித்தான். (எ-று.)

காமம், நல்லெண்ணத்தையும் உயர்குடிப் பிறப்பையும்புகழையும் மானத்தையும் செல்வத்தையும் கெடுத்து,பழியை வளர்த்து மனத்தையும் கண்களையும் கலக்கும் என்று கருதினானென்க.

இனி ‘நடைப்படுகாமம்‘ என்றதனால், இழிதகவினை யுடைய காமம் இவ்வாறு கேடு விளைக்கும் என்று கொள்க.

            இதுவுமது

121.  உருவினொ டழகு மொளியமை குலனும் பேசின்
  திருமக ளனைய மாத ரிவளையுஞ் சிதையச் சீறிக்
  கருமலி கிருமி யன்ன கடைமகற் கடிமை  செய்த
  துருமதி மதனன் செய்கை துறப்பதே சிறப்ப தென்றான்

(இ-ள்.) பேசின்-சொல்லுமிடத்து, திருமகள் அனைய மாதர் இவளையும்-திருமகளைப்போன்ற அழகுடைய பெண்ணாகிய இவளையும், உருவினொடு -சிறந்த வடிவத்தோடு, அழகும் -அழகையும், ஒளி அமைகுலனும்-பெருமை பொருந்திய உயர்குடிப் பிறப்பையும், சிதைய-கெடும்படி, சீறி-கோபித்து, கரு மலி கிருமி அன்ன-கருவில்மிகுந்த புழுவைப் போன்ற, கடைமகற்கு-இவ் விழிமகனுக்கு, அடிமை செய்த-அடிமைப் படுத்திய, துருமதி மதனன்-கெட்ட அறிவினையுடைய மன்மதனது, செய்கை-செயலை, துறப்பதே-கைவிடுவதே,

சிறப்பது-உயர்வுடையதாகும்,  என்றான்-என்றெண்ணினான்.