உண்டாகும்: (பின்னர்), முற்ற முன் உரைத்த பேறும்
வந்துஉறும் - முன் (227இல்) உரைத்த கடையிலா அறிவு முதலியனவும் முடிய வந்தெய்தும்,
என்றான் - என்று கூறினார். (எ-று..)
மும்மணி நிறையப் பெற்றோர் இந்திரன், நரேந்திரன் முதலியோர் பதவியை யெய்துவரென்றா
ரென்க.
‘முச்சக் கரத்தொடு சித்தியு மெய்துவர், நச்சறு காட்சியவர’ என்பது ஈண்ட அறிதற்பாலது. ‘அற்றமில் அறிவு காட்சி‘ என்பது குற்றங்களின் நீங்கிய அறிவு காட்சிகளை: குற்றமாவன: மூடம், சம்சயம், விமோஹம்
முதலியன. இவை ஞானத்தினை யெய்துவோர்க்குத் குற்றமாகும். ஐயமின்மை (யசோ. பக்.
88.) முதலியவற்றிற்கு மாறான சங்கை முதலிய குற்றம் 8: (தாயின் சம்பந்தமான) பிறப்பு,
குலம், வல்லமை, செல்வம், சிறப்பு (பெருமை) தவம், அறிவு ஆகிய (இவற்றால் பெரியோம்
யாம் என்று பிறரையிகழும்) கர்வம் 8: லோக, தேவ, பாஷண்டமாகிய மூடம் 3:(பொய்வேதம்
முதலியவற்றிற்கு வணங்குதலாகிய) தீயசேவை 6: ஆக இந்த 25-ம் நற்காட்சியினை யெய்துவோர்க்குக்
குற்றமாகும். இவைகளின், நீங்கினவர்களையே, ‘அற்றமில் அறிவுகாட்சி‘ யுடையர் என்றார்.
‘இறுகுமெண் மயமுமூட மாறுதீவினயமின்றி, நெறிவிளக்குறுத்தலாதி யெட்டங்க நிறைந்ததென்றான்,
என்றார் (மேரு. 355.) வாமனரும். மற்றும் இவைகளை விரிவாக அறியவேண்டின், அருங்கலச்செப்பு
(13 முதல் 24 வரை), அறநெறிச்சாரம் (13 முதல் 19 வரை), நீலகேசி (121 முதல்
123 வரை), சிந்தாமணி (2816) முதலியவற்றைப் பார்க்க. பெற்றனர், முற்றெச்சம்.
புரிதல் - விரும்புதல். ‘புகுமுகம் புரிதல்‘ (தொல். பொ. 261) பேணுதல் - ஆதரித்தல்:
பாதுகாத்தல். பதினாறு பாவனையின் விவரம் ஸ்ரீபுராணம் (பக். 72.) பார்க்க. இறை -
அரசன். முற்ற - முழுவதும். பேறு - வீடுபேறு. (15)
235. |
உறுபொரு ணிலைமை தன்னை யுற்றுணர்
வறிவ தாகும் |
|
அறிபொரு
ளதனிற் றூய்மை யகத்தெழு தெளிவு காட்சி |
|