- 257 -
  ஒருவிய பயனு மஃதே யொளியினோ டழகு வென்றி
  பொருள்மிகு குலனோ டின்பம் யுணர்தலு மாகு மாதோ. 

(இ-ள்.)  பொருள்வயின் - (தனம் தான்யம் முதலிய) பொருள்களிடத்தே, இறுக்கம் இன்மை - கடும்பற்று இல்லாமை, தெருளுடை, மனத்தில் சென்ற - தெளிவினையுடைய உள்ளத்திற் கடைப்பிடித்த,  தெளிந்த  -  தெளிவாகிய, உணர்வுஆய செல்வம் - ஞானச் செல்வத்தை, புணர்த்திடும் - கூட்டும்:புலைசு  தேன் கள் ஒருவிய பயன் உம் - புலால் தேன் கள் இவைகளை உண்ணாது  விலக்கியதன் பயனும், அஃதே - அதுவே யாகும்:  (அன்றியும்), ஒளியினோடு - கீர்த்தியோடு, அழகு - அழகையும், வென்றி - வெற்றியையும், மிகு பொருள் - மிக்க பொருளையும்,  குலனோடு - நற்குலத்தையும், இன்பம் - இன்பத்தையும் புணர்தலும் ஆகும் - அடைதலும் ஆகும். (எ - று.)

லோபமின்மை புலால் முதலியன உண்ணாமை என்ற இப் பண்புள்ள தூய்மை யாளர்க்குப் பயன் கூறினாரென்க.

தெருள் - தெளிவு.  ‘தெருண்ட வறிவினர்‘(நாலடி.301):  தெளிந்த - தெளிவுடைய:  நம்பிக்கையுடைய, தெளிந்த உணர்வு, ‘தெளிந்துணர்வு‘ என விகாரமாயிற்று. பொருள்வயின் இறுக்க மின்மை - கடும் பற்றுள்ளம் இன்மை.  “விரையார் மலர்மிசைவருவார் திருவறம் விழைவார் கொலையினைவிழையார் பொய், யுரையார் களவினையொழுகார் பிறர்மனையுவவார் மிகுபொருள் உவவார் வெஞ்சுரையால் உணர்வினையழியார் அழிதசைதுவ்வார்  விடமென வெவ்வாறும். புரையார் நறவினைநுகரார் இரவுணல்புகழார்குரவரை யிகழாரே”  என்னும் திருக்கலம்பகச் செய்யுள்ஈண்டு  ஒப்புநோக்கற்பாலது.  மிகு என்பதனை மற்றையவற்றிற்கும் ஏற்றிக் கூறலுமாம்.  மாது, ஓ : அசைகள்.   (19)

239.  சிலைபயில் வயிரத் தோளாய் செப்பிய பொருளி தெல்லாம்
  உலைதலில் மகிழ்வோ டுள்ளத் துணர்ந்தனை கொள்கவென்னக்
  கொலையி்னி லொருவலின்றிக் கொண்டனெனருளிற்றெல்லாம்
  அலைசெய்வ தொழியின் வாழ்க்கை யழியுமற் றடிகளென்றான்.