- 270 -

 (இ-ள்.) இன்னணம் - இவ்வண்ணம், அரச செல்வத்து யசோமதி செல்லும் நாளில் - ராஜசெல்வத்தில் யசோமதி வேந்தன் இன்பம் நுகரும் நாளில், பொன்இயல் அணிகொள் புட்பாவலி எனும் பொங்குகொங்கை - திருமகளனைய அழகுவாய்ந்தவளும் புட்பாவலி யென்னும்  ழழழபெயருடையபொலிவுறும்   தனங்களையுடையவளுமான அரசமாதேவி, இன்இயல் - இனிய இயல்பினையுடைய,  இரட்டையாகும் இளையரை - இரட்டைப்பிள்ளைகளை,  ஈன்று - பெற்று, சில் நாள் பின்னும்  - சில காலத்திற்குப் பின்னரும், பேதை-பேதையாகிய அவள், ஓர் சிறுவன் தன்னை - ஓர் ஆண்மகவை, பெற்றனள் ---, (எ-று.)

அரசமாதேவி, முதலில் இரட்டைப்பிள்ளைகளையும் பின்னர் ஓர் ஆண்மகவையும் பெற்றாளென்க,

பொன்இயல் அணி - பொன்னாலாகிய ஆபரணமெனினுமாம்.  இரட்டையாகும் இளையருள் ஒருவர் ஆண்:  மற்றவர்பெண்.  இது முன்னர் அறியலாகும்.  பேதை - பெண் பொங்கு கொங்கை - அன்மொழித் தொகை.  தான், அசை.

253.  அன்னவர் தம்முள் முன்னோ1 னபயமுன் னுருசி தங்கை
  அன்னமென் னடையி னாளு மபயமுன் மதியென் பாளாம்
  பின்னவர் வளரு நாளுட் பிறந்தவ னிறங்கொள் பைந்தார்
  இன்னிளங் குமரனாம மிசோதர னென்ப தாகும்.

(இ-ள்.)  அன்னவர் தம்முள் முன்னோன்  - அவ்விரட்டையருள் முன் பிறந்தவன்,  அபயமுன் உருசி - அபயருசி என்பவன்:  தங்கை - அவனுடைய தங்கையாகிய,அன்னம் மெல் நடையினாளும் அபயமுன் மதி என்பாள் ஆம் - அன்னத்தின் நடைபோலும் மெல்லிய  நடையினையுடையளாகிய அபயமதி யென்பவளாவாள்:  அவர் வளரும்நாளுள் - அவ்விருவரும் வளர்ந்துவரும்   நாட்களில்,பின் பிறந்தவன் - பின்னர்ப்   பிறந்தவனாகிய,  நிறம்கொள்பைந்தார் இன்இளங்  குமரன் நாமம் -  நன்னிறமுடைய புதிய பூமாலையுடைய இனிய இளையோனதுபெயர், இசோதரன் என்பது ஆகும் - யசோதரன் என்பதாம்.

1 முன்னா