அம்மக்கள் அபயருசி, அபயமதி, யசோதரன் என்னும்பெயரினர்
(என்று அபயருசி கூறினான்) என்க.
அபயமென்ற பதத்தை முன்னாலுடைய உருசி,அபயருசி. (யசோ.
25, 76) அபயமுன் மதி என்பதற்கும்இங்ஙனமே கூறிக்கொள்க. யசோதரன் என்பது, பாட்டன்
பெயர். அவ்யசோதரனே இக்காப்பியத் தலைவன்.
(34)
*254 |
பரிமிசைப் படைப யின்றும் பார்மிசைத்
தேர்க டாயும் |
|
வரிசையிற்கரிமேற்கொண்டும் வாட்டொழில்பயின்று
மன்னர்க் |
|
குரியவத் தொழில்க ளோடு கலைகளின்
செலவை யோர்ந்தும் |
|
அரசிளங் குமரன் செல்நா ளடுத்தது
கூற லுற்றேன். |
(இ-ள்.)
அரசிளங்குமரன் - யசோதரன், பரிமிசைபடை பயின்றும் -குதிரையேறிச் செய்யும் போர்த்தொழிலில்பழகியும்.
பார் மிசை தேர் கடாயும் - பூமியில் தேரைச்செலுத்தியும், வரிசையில் - முறைப்படி,
கரிமேல் கொண்டும் -யானையேறிச் செய்யும் வேற்படை பயின்றும், வாள்தொழில்பயின்றும்
- தரையில் நின்று செய்யும் வாட்போர் முதலியபோர்த்தொழிலில் பழகியும், மன்னர்க்கு
உரிய அத்தொழில்களோடு - அரசருக்குரிய அப்போர்த்தொழில் பலவற்றோடு, கலைகளின்
செலவை ஓர்ந்தும் - (அறுபத்து நான்கு) கலைஞானங்களின் முடிவையும் விளக்கமாக அறிந்தும்,
செல்நாள் -செல்லும் நாளில், அடுத்தது கூறல் உற்றேன் - நிகழ்ந்தவற்றை கூறலுற்றேன்
(என்று அபயருசி கூறினான்).
யசோதரன்
நாற்படையும் பயின்று பல்கலையறிவும் பெற்றானென்க.
யசோதரன் பருவமெய்திக் கலைகளை யுணர்ந்தானென்றமையின்,
அபயருசி, முன்னரே கலைகள் முதலியன உணர்ந்
*
|
தமிழிலுள்ள அச்சுப் புஸ்தகங்களில், இச்செய்யுளின் பின்
நான்காஞ் சருக்கம் முடிந்தது என்று உளது. ஆயினும், ஓலைச்சுவடிகளில் அவ்வாறு
இல்லை. முதனூலாகிய வடமொழியசோதர சரிதத்திலும் இல்லை. அவற்றைப் பின்பற்றி
நூல்முடிவுவரை நான்காஞ் சருக்கமாகவே கொள்ளப்பட்டுளது.
|
|