பக்கம் எண்: தேடுக
பன்னிருபாட்டியல் பக்கம் : 13

109

கண்ணிய நேர்நிரை நேர்வரிற் கடுங்கதிர்
நண்ணிய நோய்தரு நாள்புனர் பூசம்.
 

(12)

110 நிரைநிரை நேர்தாம் வரினது வானம்
பெருகிய கேடது 1தருநா ளோணம்.
 

(13)

111 நெருப்பின் கணநிரை நேர்நிரை கார்த்திகை
விருப்புறு நாள திடுக்கண் செய்யும்.
 

(14)

112 காட்டிய நேர்நேர் நிரைவரிற் காற்றது
நாட்டறை போக்குநாட் சோதி யாகும்.
 

(15)

113 நிற்பன தீக்கண நான்கவை நீக்கி
நற்கண நான்கவை நாட்டினர் கொளலே.
 

(16)

114 நீரே நிலனே வாே நீண்மதி
சீரிய மானன் செந்தீத் தெறுகதிர்
காற்றெனக் கிளர்ந்த கூற்றன வென்ப.
 

(17)

115 அவைதாம்,
நேர்முத லாகி நிரையிணை பின்வரி
னீர்க்கண மென்ப நெறியுணர்ந் தோரே.
 

(18)

116 நிரைமூன் றியைந்தது நிலனெனத் தகுமே.
 

(19)

117 முந்துநிரை யிணைந்து நேரிறு மூவசை
யந்தர கணமென் 2றறிதல் வேண்டும்.
 

(20)

118 முதனிரை யாகி யிணைநேர் வழிவரி
னதுமதிக் கணமென் 3றறிந்தனர் கொளலே.
 

(21)

119 4நேரசை மூன்றிய மானன் கணமே.
 

(22)

120 நேர்நடு வாகி நிரையிரு பாலுஞ்
சேரு மாயிற் செந்தீக் கணமே.
 

(23)

121 நிரைநடு வாகி நேரிரு பால்வரி
னலர்கதிர்க் கணமென் றறிந்தனர் கொளலே.
 

(24)


     [பி-ம்.] 1 நாளோண மென்ப. 2 றறைதல். 3 றறைந்தனர்.
4 ‘நேர்முச் சீரிய மானன் கணமே’ (30) [ச-பி.]
முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்