|
122 |
ஈறுநிரை யாகி யிணைநேர் முன்வரின்
மாறி வந்த மாருத கணமே. |
|
|
(25) |
| 123 |
1நிலனு மதியு நீருமிய மானனு
நலமிகு முதல்வரிற் பிறநான் கும்பகை. |
|
|
(26) |
| 124 |
யாவர்செய் யுட்கு மினமொடு புணரு
மூவசைச் சீரே 2முதனிற் பனவே. |
|
|
(27) |
| 125 |
அவைதாம்,
பெருக்கஞ் செய்தலின் வாழ்நாள் பயத்தலிற்
றருக்கிய சீர்த்தி தன்னைத் தருதலின்
மிகுதிரு வாக்கலின் வேந்தர்க்கும் பிறர்க்குந்
தகுமெனப் பகரினுந் தகாதுமற் றச்சீர்க்
குரிய நாளொடு செய்யுட் செய்யும்
பொருபடைக் குரிசினாள் பொருந்தாக் கடையே. |
|
|
(28) |
| 126 |
அவைதாம்,
தேயம் போக்குதல் செல்வத்து விளிதல்
சூனிய மாதல் சுழனோ யுறுத
லூனம் பயக்குமென் றுரைத்தன ராயினு
மாதி யமுதெழுத் தாகிய சீர்கட் கோதிய தெய்வத் திற்குரித் தாக
வோதிய நாளொடு பாடப் படுமே. |
|
|
(29) |
| 127 |
எல்லாக் கணமு நாணல மிலவெனிற்
பொல்லாங்கு தருமெனப் புகல வேண்டும். இந்திரகாளியார். |
|
|
(30) |
| 128 |
மங்கல மமைந்த சொல்லொடு பொருந்திய
வீரசை நான்கினு ணேரீ றொழித்து |
|
| |
| |
1 “நேரசை மூன்றிய மான னிரைப்பின்பு நேரிரண்டு
சேர்வன திங்க ணிரையசை மூன்றுஞ் செழுநிலமா
நேரசைப் பின்னர் நிரையிரண் டாய்வரி னீர்க்கணமாந்
தேரிய லல்குற் றிருவே யிதுநல்ல சீர்க்கணமே.” |
|
| |
என்பது நவநீதப்பாட்டியல் |
| |
| |
[பி-ம்.] 2 முன்னிற் பனவே. |
|