பக்கம் எண்: தேடுக
பக்கம் : 36 பன்னிருபாட்டியல்
 
பன்னிருபாட்டியல்

 

கன்னியை யேத்த லலகை விநோதங்
கனாநிலை நிமித்தம் பசியே யோகை
பெருந்தேவி பீட மழகுற விருக்க
வமர்நிலை நிமித்த மவள்பதம் பழிச்சா
மன்னவன் வாகை மலையு மளவு
மரபினி துரைத்தன் மறக்களங் காண்டல்
செருமிகு களத்திடை யடுகூழ் வார்த்தல்
1பரவுத லின்ன வருவன பிறவுந்
தொடர்நிலை யாகச் சொல்லுதல் கடனே.
 

(72)

244  

யானை சாய்த்த வடுகளத் தல்ல
தியாவரும் பெறாஅர் பரணிப் பாட்டே.
 

(73)

245  

2ஏழ்தலைப் பெய்த நூறுடை யிபமே
யடுகளத் தட்டாற் பாடுதல் கடனே. 
 

(74)

9-மடல்.

246  

அறம்பொருள் வீடு திறம்பெரி தழித்துச்*
சிறந்த வேட்கை செவ்விதிற் பராஅய்ப்
பாட்டுடைத் 3தலைமக னியற்பெயர்க் கெதுகை
நாட்டிய வெண்கலிப் பாவ தாகித்
தனிச்சொல் லொரீஇத் தனியிடத் தொருத்தியைக்
கண்டபி னந்த வொண்டொடி 4யெய்தலு
மற்றவள் வடிவை யுற்றகிழி யெழுதிக்
காமங் 5கவற்றக் கரும்பனை மடன்மா
வேறுவ ராடவ ரென்றனர் புலவர்.
 

(75)

247  

மடன்மாப் பெண்டி ரேறா ரேறுவர்
கடவுளர் தலைவ ராய்வருங் காலே.
 

(76)

248  

 கடவுளர் மேற்றே காரிகை மடலே.*
 

 (77)


     [பி-ம்.] 1பரவுதன் மன்ன. 2இச்சூத்திரம் சங்கத்துப்பிரதியிற் காணப்பட வில்லை.
     * இவ்வாறு வந்தன மங்கையர்கோன் அருளிச்செய்த சிறிய திருமடல் பெரிய திருமடல் என்பன.
     [பி-ம்.] 3தலைவ னியற்பெயர்க். 4யேத்தன். 5கையறக்.
முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்